Friday, September 14, 2007

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடக்கூடாது: சிறிலங்கா அரசாங்கம்.!!

[வெள்ளிக்கிழமை, 14 செப்ரெம்பர் 2007]


சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டால் அது விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக இருக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவருக்கு சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரோகித போகல்லாகம கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஐரோப்பிய ஒன்றியம் தலையிட்டால் அது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

"சிறிலங்காவில் மனித உரிமைகள் தற்சமயம் மேம்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுக்கு எதிராக நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளுமானால் அது விடுதலைப் புலிகளுக்கே சாதகமாக இருக்கும். கடந்த 3 மாதக் காலப் பகுதிக்குள் சிறிலங்காவின் மனித உரிமை மேம்பாடு குறித்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் சமர்பிக்க தயாராக உள்ளது" என்றும் அக்கடிதத்தில் ரோகித போகல்லாகம குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.