[ஞாயிற்றுக்கிழமை, 16 செப்ரெம்பர் 2007]
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி யாழ். குடாநாட்டில் மிகவும் தெளிவாக ஒளிபரப்பை மேற்கொண்டு வருவதாகவும், அது உயர் அலைவரிசையுடன் ஏனைய தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விட தெளிவாக இருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் தமிழ் செய்திகளை தமிழீழத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகின்றது.
உயர் அலைவரிசை கொண்ட இந்த ஒளிபரப்பானது கிளிநொச்சியில் இருந்து ஒளிபரப்பப்பட்டு வருவதுடன், கொழும்பை தளமாக கொண்டியங்கும் ஏனைய தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விட சக்தி வாய்ந்ததாக உள்ளது.
யாழ். குடாநாட்டில் இந்த ஒளிபரப்பு தெளிவாக தெரிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26 ஆம் நாள் தொடங்கப்பட்ட இந்த ஒளிபரப்பு முதலில் 15 நிமிட நேர செய்தி அறிக்கையை ஒளிபரப்பு செய்த போதும் தற்போது அதன் ஒளிபரப்பு நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழீழத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தற்போதைய நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வு, சமய நிகழ்வுகள் ஒளிபரப்பப்படுகின்றன. முதலில் அது செய்மதி மூலம் ஒளிபரப்பப்பட்ட போதும் அண்மையில் பல மாதங்களாக அதன் ஒளிபரப்பு நீடிக்கப்பட்டுள்ளது.
தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் ஒளிபரப்புக்கள் ஐரோப்பாவிலும் ஒளிபரப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.