[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2007] திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் கிராமசேவகர் நேற்று வியாழக்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு பிள்ளையின் தந்தையான முத்துக்குமார் பரஞ்சோதி (வயது 52), மூதூர் பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் முத்துக்குமார் சௌந்தரராஜனின் சகோதரர் ஆவார். மூதூர் பாலத்தடிச்சேனையில் உள்ள தனது வீட்டிலிருந்த போதே நேற்று இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பாலத்தோப்பூர் சிறிலங்கா இராணுவ முகாமிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் இப்படுகொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிராமசேவகரான அவர் சிறந்த சமூக சேவையாளர் என்பதுடன் சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். கடந்த ஒரு வாரமாக திருகோணமலையின் புறநகர்ப் பகுதிகளில் தமிழர்கள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டு வருகின்றனர்.
Friday, September 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.