[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2007]
யாழ்ப்பாணத்தில் இன்று நன்பகல் இனம் தெரியாதவர்களின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நண்பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றது. யாழ்ப்பாணம் கந்தப்பு செட்டியார் வீதியில் இந்த துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம் பெற்றது.
இதில் கொல்லப்பட்டவர் யார் என்பதை இனம் காணவில்லை. ஆனாலும் மோட்டார் சையிக்கிளில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிப் பியோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற போது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் ஆனால் துப்பாக்கி தாரிகள் தப்பி சென்று விட்டதாகவும் தெரிய வருகின்றது. நேற்றைய தினமும் இந்தப் பகுதியில் வீதியோர நடை பாதை வியாபாரி ஒருவர் இராணுவ புலனாய்வாளர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பி;டத்தக்கதாகும்.
குறிப்பிட்டவர் துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளாகியதைத் தொடர்ந்து இராணுவத்தினர் பரவலாக ஆகாயத்தை நோக்கியும் துப்பாக்கி தாரிகளை நோக்கியும் துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டதில் பொது மகன் ஒருவர் காயப்பட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இதில் மரணம் அடைந்தவர் இராணுவப் புலனாய்வாளர்களுடன் சேர்ந்து இயங்கும் ஓட்டுக்குழுவின் யாழ் மாவட்டத்தின் முக்கிய உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுவதுடன் யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற வரும் இனம் தெரியாத கொலைகளுக்கு காரணமாக இருப்பவர் எனவும் பொது மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் ஆட்டோ சாரதிகள் மற்றும் பேரூந்து நிலையப் பகுதிகளில் வர்த்தக நிலையங்களை நின்றவர்களையும் தாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் யாழ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.