[வெள்ளிக்கிழமை, 21 செப்ரெம்பர் 2007]
முல்லைத்தீவு மாவட்டம் விசுவமடு மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை கிபீர் வானூர்திகள் இன்று குண்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதில் ஒன்றரை வயது சிறுவன் காயமடைந்தார்.
கிபீர் வானூர்திகள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.35 மணிக்கு வன்னி வான்பரப்பில் நுழைந்து விசுவமடு மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து குண்டுகளை வீசின.
இத்தாக்குதலில் வீசப்பட்ட குண்டுச் சிதறல்களினால் ஒன்றரை வயதுச் சிறுவன் கவிப்பிரியன் காயமடைந்தார்.
மேலும் விசுவமடு உள்ளிட்ட கிளிநொச்சிப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் அவலப்பட்டனர்.
பாடசாலைகளின் மாணவர்கள் அவலக்குரல் எழுப்பினர். மக்களும் சிதறி ஓடினர். பாடசாலைகளில் இருந்து உடனடியாக மாணவர்கள் வீடுகளுக்கு ஓடினர்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.