[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007] யாழ். தமிழர்களுக்கு உணவு-மருந்துப் பொருட்களை அனுப்ப மத்திய-மாநில அரசுகள் விரைந்து செயல்படவேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கை தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்புவதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதமிருந்து வருகிறார். இந்நிலையில் மத்திய அரசில் முக்கிய இடம் பெற்றிருக்கும் தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்கிறது. எனவே தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசோடு கலந்து பேசி நேரிடையாக தலையிட்டு மருந்து மற்றும் உணவு பொருட்களை இலங்கைக்கு அனுப்பி, செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் மக்களுக்கு போய்ச்சேர ஆவண செய்திட வேண்டும். தனியார் மற்றும் சமூக அமைப்புகள் தரும் உதவிப் பொருட்களையும் மத்திய, மாநில அரசுகள் பெற்று இலங்கைக்கு அனுப்பிட ஆவனசெய்ய வேண்டும். மனிதாபிமானத்தோடு கூடிய உதவிகளை மத்திய, மாநில அரசுகள் விரைந்து செய்திட வேண்டும் என்றார் அவர்.
Saturday, September 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.