Wednesday, September 12, 2007

ஆழிப்பேரலை எச்சரிக்கை: வடக்கு - கிழக்கில் மக்கள் இடப்பெயர்வு.!!

[புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007] ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையோர பிரதேச மக்கள் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். கிழக்குப் பகுதி மக்கள் அவசர அவசரமாக உட்பகுதிக்கு இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். கரையோரப் பகுதிகளுக்கான பேரூந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளான முல்லைத்தீவு, வடமராட்சி கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் உட்பகுதியை நோக்கி இடம்பெயருகின்றனர். மேலும் இலங்கையில் பெரும்பாலான தொலைத் தொடர்புகள் செயலிழந்துள்ளன. கடலடி கேபிள்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.