[புதன்கிழமை, 12 செப்ரெம்பர் 2007] இந்தோனேசியத் தீவுப் பகுதியான சுமர்த்திராவின் மேற்குப் பகுதியில் பாரிய நிலடுக்கம் இன்று புதன்கிழமை மாலை அந்நாட்டு நேரப்படி மாலை 6.10 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 8.2 அலகுகளாகப் பதிவாகி உள்ளது. இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலும் இதர பகுதிகளிலும் இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மேலதிக செய்திகள் வெளியாகவில்லை. இந்நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்து மா சமுத்திரப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கையை பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் விடுத்துள்ளது. "இத்தகைய நிலநடுக்கத்தினால் இந்து மா சமுத்திரப் பகுதிகள் பாதிக்கப்படக்கூடும்" என்று பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்றிரவு 8 மணியளவில் ஆழிப்பேரலைகள் கரையை நெருங்கலாம் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பெரும்பாலான தொலைத் தொடர்புகள் செயலிழந்துள்ளன. கடலடி கேபிள்கள் சேதமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. வடக்கு - கிழக்கு கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களையே உடனடியாக வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
Wednesday, September 12, 2007
(2 ஆம் இணைப்பு) இந்தோனேசியாவில் பாரிய நிலநடுக்கம்: இந்து மா சமுத்திரம் முழுமைக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை.!!!
Wednesday, September 12, 2007
1 comment
Subscribe to:
Post Comments (Atom)






We are running a project Integrated Tsunami Watcher Service and gave alert via SMS to our area costal people in next 30 minutes of the earthquake. More information on http://www.ina.in/itws/ . But we don't have any Sri Lankan mobile phone numbers (except only one) , So Can you help to provide few costal area people mobile numbers?
ReplyDeleteMuhammad Ismail .H
+91.98424.96391
comment #1