[சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2007]
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இன்று மூன்றாவது நாளாக சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் 85 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். 6 மாத கைக் குழந்தை, 9 வயது சிறுமி, 15 வயது சிறுவன் உள்ளிட்ட 12 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையான புதுக்குடியிருப்பு புன்னைநீராவியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை காலை 7 மணியளவில் கிபீர் வானூர்திகள் இத்தாக்குதலை நடத்தின.
குடியிருப்புக்கள் மீது வீசப்பட்ட நான்கு குண்டுகளில் ஒரு குண்டு வெடிக்கவில்லை.
இத்தாக்குதலில் படுகாயமடைந்த தம்பு வைரமுத்து (வயது 85) என்ற முதியவர் தருமபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன் பின்னர் கிளிநொச்சி பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்தோர் விபரம்:
உயிரிழந்த தம்பு வைரமுத்துவின் மகன் தம்பு முத்துலிங்கம் (வயது 57)
தம்பு வைரமுத்துவின் மகளும் விசுவமடு மத்திய கல்லூரி ஆசிரியருமான தம்பு தெய்வமணி (வயது 35)
6 பிள்ளைகளின் தந்தையான முத்துசாமி சக்திவேல் (வயது 40)
கிளிநொச்சி பனை அபிவிருத்திச் சபை அதிகாரியான ரி.நடராசா (வயது 85)
கண்ணகி துரைரட்ணம் (வயது 51)
கண்ணகியின் கணவர் எஸ்.துரைரட்ணம் (வயது 55)
6 மாத கைக்குழந்தையான ஏ.வன்னிமன்னன்
பி.சுப்பிரமணியம் (வயது 55)
பி.சுப்பிரமணியத்தின் மனைவி பி. புஸ்பமலர் (வயது 45)
பி.சுப்பிரமணியத்தின் மகள் தர்சிகா (வயது 9)
என்.வரைவநாதன் (வயது 65)
லக்ஸ்மன் (வயது 15)
படுகாயமடைந்த தம்பு தெய்வமணி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏனையோர் தருமபுரம் மற்றும் கிளிநொச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.