Tuesday, September 18, 2007

தவறுதலான வெடிவிபத்து: இரு போராளிகள் வீரச்சாவு

[செவ்வாய்க்கிழமை, 18 செப்ரெம்பர் 2007] கிழக்கு மாகாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியில் கடந்த சனிக்கிழமை (15.09.07) இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர். லெப். கேணல் உலகநாதன் அல்லது அயொனி என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த கதிர்காமப்பொடி இராமலிங்கம் லெப். கேணல் பவமாறன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த மாட்டின் சில்வா ஜெயச்சந்திரன் ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இம் மாவீரர்களின் உரித்துடையோர் அருகில் உள்ள அரசியல்துறை செயலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.