Saturday, September 22, 2007

பிரான்சில் குடியேறுவதை கடுமையாக்கும் புதிய சட்டமூலம் நிறைவேற்றம்

[சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2007] பிரான்சின் தேசிய சட்டமன்றமானது அந்நாட்டில் வாழும் குடியேற்றவாசிகளின் குடும்ப அங்கத்தவர்கள் அந்நாட்டில் பிரவேசிப்பதற்கான நிபந்தனைகளைக் கடுமையாக்கும் சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளது. இப்புதிய சட்டவிதிகளின் பிரகாரம் உறவினர்கள் தமது நிதியியல் இயல்தகவு மற்றும் பிரெஞ்சு மொழிபேசும் ஆற்றலை நிரூபிக்க வேண்டப்படுகிறது. மேலும் பிரான்சில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து கொள்ள எதிர்பார்த்துள்ள வெளிநாட்டவர்கள் மரபணு பரிசோதனையொன்றுக்கு உட்படுத்தப்படக் கோரும் திட்டங்களையும் இப்புதிய சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது. மேலும் குடியேற்ற வாசிகளின் குடும்ப அங்கத்தவர்கள் 16 வயதை பூர்த்தி செய்திருப்பதும் பிரெஞ்சு மொழி தொடர்பான தமது சிறந்த அறிவை நிரூபிக்கும் வகையில் தமது சொந்த நாட்டில் பிரெஞ்சு மொழி பரீட்சையொன்றுக்கு தோற்றுவதும் அவசியமாகி றது. அத்துடன் பிரான்சில் குடியேற விண்ணப்பிப்பவர்கள் பிரான்சிலுள்ள அவர்களது குடும்பம் அவர்களுக்கு ஆதரவை வழங்கும் என்பதையும் ஆகக் குறைந்த சம்பளத்தை ஈட்ட முடியும் என்பதையும் நிரூபிக்க வேண்டும். இரண்டு வருட பரீட்சார்த்த காலப்பகுதிக்கே பிரான்சிலுள்ள தமது குடும்பத்தவர்களுடனான இரத்த தொடர்பை நிரூபிக்கும் வகையில் மரபணுபரிசோதனை நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகி றது.இந்த சட்டமூலம் தொடர்பான விவாதம் எதிர்வரும் மாதம் செனட் சபையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் பிரதமர் சார்க்கோஸி இவ்வருடத்தில் மட்டும் 25000 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்போவதாக வாக்குறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வீரகேசரி நாளேடு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.