[சனிக்கிழமை, 22 செப்ரெம்பர் 2007] கனகபுரம் மகாவித்தியாலயத்தின் தற்காலிக வகுப்பறைத் தொகுதி ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது. எனினும் மாணவர்கள் சில நிமிட இடைவெளியில் பாதிப்பிலிருந்து தப்பினர். மாணவர்கள் பாடசாலையை விட்டு கடந்த செவ்வாய்க்கிழமை வெளியேறி 25 நிமிட நேரத்தில் தரம் மூன்றைச் சேர்ந்த 120 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்பறைக் கொட்டகையின் கப்புகள் அடியுடன் முறிவடைந்து திடீரென விழுந்தன. இதனால் வகுப்பறை பகுதியிலிருந்த மேசைகள், கதிரைகள் ஆகியன சேதத்திற்குள்ளாகின. மாணவர்கள் வகுப்பறையில் இருக்கும் நேரத்தில் முறிவடைந்து விழுந்திருந்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 2000 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதான இந்தத் தற்காலிகக் கொட்டகையின் பிரதான மரத்தூண்கள் (கப்பு) கறையான் அரிப்பினால் பாதிப்படைந்த நிலையில் பலத்த காற்றினால் முறிந்து விழுந்ததாக ஆசிரியர் ஒருவர் தான் நேரில் கண்ட அனுபவத்தை எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
Saturday, September 22, 2007
முறிந்து விழுந்த வகுப்பறைக் கொட்டகை: 120 மாணவர்கள் தப்பினர்.!
Saturday, September 22, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.