[சனிக்கிழமை, 15 செப்ரெம்பர் 2007]
இந்திய அரசிடம் நீதி கேட்டு ஒரு துளி நீரும் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வீரச்சாவைத் தழுவிய ஈகச்சுடர் லெப். கேணல் திலீபனின் 20 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை தொடங்கியுள்ளன.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1987 செப்ரம்பர் 15 ஆம் நாள் முதல்
1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கு - கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
2. சிறைக்கூடங்களிலும் சிறிலங்கா இராணுவ காவல்துறை தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.
4. ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக சிறிலங்கா காவல் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை இந்திய அரசின் முன்வைத்து ஒரு துளி நீரும் அருந்தாமல் உண்ணாநிலை மேற்கொள்ளும் தனது தியாகப் பயணத்தை திலீபன் மேற்கொண்டார்.

திலீபனின் 5 கோரிக்கைகளும் இந்திய அரசால் ஏற்கப்படாத நிலையில் செப்ரம்பர் 26 ஆம் நாள் வீரச்சாவைத் தழுவினார்.
திலீபனின் நினைவு நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை தொடங்கின.
இன்று தொடக்க நிகழ்வில் முற்பகல் 9.55 மணிக்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடங்களில் பொதுச்சுடர், தேசியக் கொடி மற்றும் ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டன. திலீபனின் திருவுருவப்படத்துக்கு மாலையிட்டு மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து 12 நாட்களும் நினைவு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
அரசியல்துறை நடுவப் பணிமனை
திலீபன் நினைவு நிகழ்வு தொடக்க நிகழ்வு விடுதலைப் புலிகளின் அரசியற்றுறை நடுவப் பணிமனையில் நடைபெற்றது.
நிகழ்வில் பொதுச்சுடரை மூன்று மாவீரர்களின் தாயாரான தவமணியம்மா ஏற்ற தமிழீழத் தேசியக்கொடியினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஏற்றினார்.
ஈகச்சுடரினை விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே பாலகுமாரன், கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான விநாயகம் ஆகியோர் ஏற்றினர்.
மலர்மாலையை சு.ப.தமிழ்ச்செல்வன் சூட்டினார்.

விசுவமடு
விசுவமடு வட்டத்தில் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை வீரவேங்கை இன்பனின் தந்தை கணேசபிள்ளை ஏற்றினார். தமிழீழத் தேசியக் கொடியினை விசுவமடு வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் வின்சன் ஏற்றினார்.
ஈகச்சுடரினை பெரியசாமி ஏற்றினார். விசுவமடு கிராம அலுவலர் விசுவமடு மகா வித்தியாலய ஆசிரியர் சீராளன் ஆகியோர் நிகழ்த்தினர்.
கண்டாவளை வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை இலட்சுமி ஏற்றினார்;.
தமிழீழத் தேசியக்கொடியினை கண்டாவளை வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குமரன் ஏற்றினார்.
ஈகச்சுடரினை தவமணி ஏற்றினார். மலர்மாலையை தம்பிஐயா சூட்டினார்.

தருமபுர வட்டம்
தருமபுர வட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரினை மாவீரரின் தந்தை ஏற்றினார்.
தமிழீழத் தேசியக் கொடியினை தருமபுர வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழரசன் ஏற்றினார்.
முழங்காவில்
முழங்காவில் கோட்ட மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடியினை வட்டப் பொறுப்பாளர் செந்தாழன் ஏற்றினார்.
கிராம அலுவலர் நாகலிங்கம் நினைவுரை நிகழ்த்தினார்.
தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 20 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டுச் சிறப்பு மருத்துவ சேவை, சிரமதானம், முதலுதவிப் பயிற்சி ஆகியன நடத்தப்பட்டு வருகின்றன.

சிறப்பு மருத்துவ சேவை
தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையினரால் மாங்குளம் ஒலுமடு தமிழ் வித்தியாலயத்தில் சிறப்பு மருத்துவ சேவை நடத்தப்பட்டது.
இந்தச் சிறப்பு மருத்துவ சேவை நேற்று முன்நாள் காலை ஒலுமடு தமிழ் வித்தியாலய அதிபர் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை மருத்துவர் எழுமதி கரிகாலன் ஏற்றி வைத்தார்.
தமிழீழத் தேசியக் கொடியை சிறப்பு மருத்துவப் போராளி பூரணி நாவலன் ஏற்றி வைத்தார். ஈகச்சுடரினைச் சிறப்பு மருத்துவப் போராளி சோபிதா ஏற்றினார். தொடர்ந்து மலர்வணக்கம் நடைபெற்றது.
பின்னர் ஒன்று முதல் ஆறாம் தரத்தில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் கண் மருத்துவம், பல் மருத்துவம், பொது மருத்துவம், குழந்தை மருத்துவம் ஆகியவற்றுடன் உடற் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
சிறிய மாணவர்களுக்கு பற் சுகாதாரம் தொடர்பாகவும்
பெரிய மாணவர்களுக்குப் பொதுச்சுகாதாரம் தொடர்பாகவும் விழிப்புணர்வுக் கருத்துகளும் வழங்கப்பட்டன.
ஆசிரியர்களுக்கு "ஆரோக்கியமான சமுதாயத்தை நோக்கி" என்ற தலைப்பில் மாணவர்களின் போசாக்கு, கல்வி, ஒழுக்கம் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கும் நடத்தப்பட்டது.
இம் மருத்துவ சேவையில் 200-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர் என்று சிறப்பு மருத்துவப் போராளி சோபிதா தெரிவித்துள்ளார்.
சிரமதானப் பணி
புதுக்குடியிருப்புக் கோட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று முன்நாள் வள்ளிபுனம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் சிரமதானப் பணி நடைபெற்றது.
பாடசாலை மைதானம், வீதியின் இருமருங்குகள், பாடசாலைச் சூழல் ஆகிய பகுதிகள் சிரமதானம் மூலம் சீர்செய்யப்பட்டன.
இப்பணியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முதலுதவி அணியின் பயிற்சி
உடையார்கட்டு, குரவில் தமிழ் வித்தியாலயத்தில் புதுக்குடியிருப்பு கோட்ட மாணவர் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழீழ சுகாதார சேவைகளின் கல்வியூட்டல் பிரிவினரால் மேஜர் நெல்சா முதலுதவி அணியின் பயிற்சி நிகழ்வு நேற்று முன்நாள் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினைத் தமிழீழ சுகாதார சேவைகள் கல்வியூட்டல் பிரிவுப் பொறுப்பாளர் கே.ஈழவாணி ஏற்றினார்.
தேசியக் கொடியினைப் புதுக்குடியிருப்புக் கோட்ட மாணவர் அமைப்புப் பொறுப்பாளர் சாதுரியன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மேஜர் நெல்சா அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினைப் பாடசாலை முதல்வர் ஏற்ற மலர் வணக்கத்தைப் பாடசாலை உப அதிபர் தொடங்கி வைத்தார். திருமதி இளங்கோவன் கருத்துரை வழங்கினார். புதுக்குடியிருப்புக் கோட்டக் கல்விக்கழகப் பொறுப்பாளர் அறிவன்பன் சிறப்புரை ஆற்றினார். பயிற்சி வகுப்புகளை கே. ஈழவாணி தொடங்கி வைத்தார்.
நன்றி:புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.