தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள்
Wednesday, August 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா பேரினவாத அரசாங்கத்தினால் பலி கொள்ளப்பட்ட செஞ்சோலை சிறார்கள் மற்றும் பணியாளர்களின் முதலாமாண்டு நினைவு நிகழ்வுகள்
கண்ணீர் விட வைத்த நிகழ்வு
ReplyDeleteஇதயம் மறத்துப் போன
இந்த மிருகங்களிடமிருந்தா
மனிதநேயத்தை எதிர்பார்க்கிறீர்கள்
என்று
கேலியுடன் கேள்வி கேட்பதுபோல
நிகழ்ந்த படுகொலை!
சின்னஞ்சிறு பிஞ்சுகளா
எதிரிகளாய்க்
கண்ணுக்குத் தெரிந்தனர்?
பாவிகளே!
உங்களால்
நாங்கள் இழந்த
ஒவ்வொரு சொட்டு
உதிரத்திற்கும்
நீங்கள்
பதில் சொல்லும் நாள்
வெகு தொலைவில் இல்லை!
செஞ்சோலை மலர்களுக்கு
எங்கள் இதய அஞ்சலி
http://pithatralgal.blogspot.com/2007/08/252.html
ஈழத் தமிழ்க் குலமே! எழுக!!!!!
ReplyDeleteபுத்தனா,நீ? போய்விடு! போதி மரத்தைத்தான்
எத்தனை நாளாக நம்பி யிருப்பது?
அகிம்சை போதிக்கும் அண்ணலும் வேண்டாம்!
பகையை வளர்க்கும் பாலமும் வேண்டாம்!
பிஞ்சுக் கொடியை மொட்டு மலரை
நஞ்சுக் கொடியை நசுக்கிய பாவியைக்
காணவா, கண்கள்? இருக்கும் உயிரைப்
பேணுதல் வேண்டோம்! களத்தில்நில்! நம்முள்
இருப்பதும் ஓருயிர்! என்பதை,எண்! செங்களத்தில்,
அரும்புகளைக் கொன்ற அகந்தை அழிப்போம்!
சிங்கள நாயின் சிரந்தனைக் கொய்துநமைப்
பங்கப் படுத்தும் படையை ஒழிப்போம்!
புலிகளை வெல்லுமோ பசுக்களின் கூட்டம்!
அலிகளுக்கா ஆண்மை பணியும்? தமிழா,
இறுதிக் களமிது, போராடு! நெஞ்சில்
உறுதிகொள்! உள்ளத்துள் ஈழம் தனைநினை!
தோன்றும் வரை,போர்!போர்! போர்!போர்!போர்! குண்டுமழையில்
தோன்றிட வேண்டும் தனித்தமிழ் ஈழம்!
பரணிபாடு, பாவல! உன்பாட்டுச் சந்த
அரணில் எழுகு கொடி.
பரணி பாவலன்
***********************************************
புத்தனின் போதிமரத்தில் - தொங்கும் உடல்கள்!
வித்தகக் கவிஞர் பா.விஜய்
இந்தியா வித்தியாசமான நாடு!
உள்நாட்டுத் தொழிலாளர்களைப்
பிச்சைக் காரர்களாக்கும்!
வெளிநாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!
அமெரிக்கா விவரமான நாடு!
வெளிநாட்டு தொழிலாளர்களை
பிச்சைக் காரர்களாக்குகிறது!
உள்நாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!
இலங்கை விபரீதமான நாடு!
சவப்பெட்டிகளை தயாரித்து
சமாதானம் பேசும்!
சமாதானம் பேசிக் கொண்டே
ஏவுகணை வீசும்!
புத்தனின் போதிமரத்தில் - இன்று
செஞ்சோலை சிறுமிகளின்
உடல்கள் தொங்குகின்றன
செஞ்சோலை வளாகத்தின் மேல்
குண்டு வீசிப் பறந்தது
விமானம் அல்ல
சிங்கள ராணுவத்தின்
மானம்!
ஒரு ராணுவம்
எதிரி ராணுவத்தை தாக்கும்!
என்றும் வேவு பார்க்கும்.
ஆனால் அறுபது சிறுமிகளை
அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?
இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது
ஈழத்துச் சிறுமிகளுக்கு
பூக்கோலமும் போடத் தெரியும்
போர்க்கோலமும் பூணத் தெரியும்
அவர்களுக்குப்
பல்லாங்குழியும் ஆடத் தெரியும்
பகைவர் தலைகளுக்கு
பிணக்குழியும் தோண்டத் தெரியும்
அவர்களுக்கு
தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்
எதிரிகளின்
தலைசீவி பந்தாடவும் தெரியும்
படுகளத்தில் ஒப்பாரி ஏன்
சிலபேர் சிலிர்க்கலாம்
இது ஒப்பாரி அல்ல
இழந்த வீராங்கனைகளுக்கொரு
வீரத்தாலாட்டு!
நம்தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகனை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்
இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?
நாம்
குண்டுதுளைக்காத கூண்டில்
தயங்கியபடி நிற்கிறோம்
தேசக் கொடியேற்ற
அவர்கள்
குண்டு துளைப்பதற்காகவே
தயாராக நிற்கிறார்கள்
தமிழ்தேச கொடியேற்ற
நம் குழந்தைகள் கையில்
விளையாடுவதற்காக
பொம்மை துப்பாக்கிகள்
அவர்கள் குழந்தைகள் கையில்
விடுதலை ஆவதற்காக
உண்மை துப்பாக்கிகள்
நமக்கு
குளிர்பானத்தில் விஷமிருக்கிறது
அவர்களுக்கு
விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!
புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்
கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்!
இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?
தமிழனை
உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!
தமிழனுக்கு
உணர்ச்சி இருக்கிறது என்று
உணர்த்துவது வேறு!
இரண்டாவது பணியை
இந்த உண்ணாவிரதம் செய்கிறது!
உணர்ச்சி வரும் - ஒரு நாள்
புரட்சி வரும்
(பேரா. சுப. வீரபாண்டியன் தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில்
பாடிய கவிதை)
தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்
ReplyDelete"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா.
அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள்.
அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்"தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.
ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.
அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன.
ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது.
தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.
குண்டுகள் அவள் வயிற்றை கிழித்து குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.
கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது.
ஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.
"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா"
"தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்"
"அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா"
சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"
"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்"
அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா..."
"எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ"
"அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா"
"கஜி...தேவாரம் பாடு"
"பாய்....பாய்....பா....ய்ய்...
இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்
'ஆ' வெம் முயிர் பதைக்குதே - ஆறுதல்
ReplyDeleteபகர அகரங்களில்லையே
'சே' என்ன மிருகங்களிவர்கள்? - பெற்றார்
சேர்க்கையில் தவறியவர்கள்.
'மா' விருட்சம் பெயர்க்கவியலாமல் -இந்த
மாங்கனிகளை சிதைத் தெறிந்தனரோ?
'பே' யினத்திலுமீனம் - இவர்
பிறப்பினில் தானெங்கோ ஊனம்...
அன்புடன் கவிஞன்,
ReplyDeleteஎனது செஞ்சோலை விவரணத்தை
தங்கள் பதிவில்
இணைத்ததிற்கு எனது நன்றிகள்.
மேலதிக தகவல்களையும் இணைத்திருக்கிறேன்.
அன்புடன்
தீபச்செல்வன்
-----------------------------------
செஞ்சோலை வளாக படுகொலை: செஞ்சோலையில் என்ன நடந்தது...ஓகஸ்ட் 14 2006
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சேலைவளாகத்தில்
இலங்கை வான்படை கீபீர்விமானம்
குண்டு வீசிதாக்கியதில்
53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.125க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர.
-----------------------------------------------
//செஞ்சோலை வடு//
என்ற, இந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வு குறித்த விவரணம் ஒன்றை தயாரிக்கும் முகமாக நேரடியாக காயமடைந்த மாணவிகளையும் பலியான மாணவிகளின்
பெற்றோர்கள் அவர்கள் கல்வி கற்ற பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ,
சக மாணவர்கள்
முதலியேரை செவ்வி கண்டேன்.
நான் கலங்கி ஆடிப்போயிற்றேன்...
நான் எழுதி இயக்கிய இந்த வலிமிகுந்த சந்திப்பிலானான விவரணத்தை பாருங்கள்.
http://www.yarl.com/videoclips/view_video.php?viewkey=885e0d7c260cc007e8b9
-----------------------------------
http://deebam.blogspot.com/2007/08/blog-post_5531.html