Thursday, August 16, 2007

சிறிலங்காவின் குற்றச்சாட்டுக்கு ஜோன் ஹோம்ல்ஸ் விளக்கம்

[வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007]

இலங்கைக்கு அண்மையில் பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் தெரிவித்த கருத்து சிறிலங்கா கடுமையான எதிர்ப்பலைகளை தோற்றுவித்த நிலையில் அவர் தனது கருத்து தொடர்பான விளக்கத்தை சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளார்.

மனிதநேய பணியாளர்கள் பணியாற்றுவதற்கு சிறிலங்கா உகந்த இடம் அல்ல அங்கு மனித உரிமை மீறல்கள் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது என அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச்செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் றொய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஹோல்ம்ஸிடம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கம் கோரியிருந்து.

இதனையடுத்து சிறிலங்காவின் பேரிடர் முகாமைத்துவ அமைச்சரான மகிந்த சமரசிங்காவிற்கு ஹோல்ம்ஸ் நேற்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பாக அரசு தனது கருத்தில் எடுக்கவில்லை. அது மனிதாபிமான பணியாளர்களை பாதுகாக்க முற்படவில்லை என்பதன் அர்த்தத்திலும் நான் எனது கருத்தை தெரிவிக்கவில்லை. ஆனால் அங்கு நடைபெற்றுவரும் மோசமான சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடைவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இலகுவாக வழியில் கூறியிருந்தேன்.

அதுவே எனது செய்தி முழுவதிலும் உள்ள கருத்தாகும். அரசுடன் ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதுவே எனது உளப்பூர்வமான விரும்பமாகும். எனினும் சிறிலங்காவில் ஏற்பட்டுவரும் மனிதாபிமான நெருக்கடிகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதிலும், கிழக்கின் நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பதிலும் நான் தொடர்ந்து ஆவலாக இருக்கிறேன்.

எனது நேர்காணலில் நான் அரசாங்கத்துக்கு எதிரான கருத்தை கூற முயலவில்லை. எனது பயணத்தின் போது பொதுமக்களிடம் இருந்து தனிப்பட்ட ரீதியில் என்னால் பெறப்பட்ட சில கருத்துக்களை நான் முன்வைத்திருந்தேன். மேலும் மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு தொடர்பான எனது கருத்தையும் நான் சந்தித்த எல்லோரிடமும் தெரிவித்திருந்தேன். அதனையே அமைச்சருடன் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் தெரிவித்தேன் என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் மகிந்த ராஜபக்ச மற்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க ஆகியோரையும் அவர்களது நியூயோர்க் பயணத்தின் போது எதிர்வரும் மாதம் சந்திக்க விரும்புவதாக அவர் தனது கடிதத்தின் முடிவுரையில் தெரிவித்துள்ளார்.

நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.