Wednesday, August 15, 2007

ஐ.நா. உயர் அதிகாரி ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி-புலிகளிடம் இலஞ்சம் வாங்கியவர்: அமைச்சர் ஜெயராஜ்

[புதன்கிழமை, 15 ஓகஸ்ட் 2007]


ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும் நிவாரண ஒருங்கிணைப்பாளருமான ஜோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி என்று சிறிலங்கா அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது:

பயங்கரவாதத்தை ஆதரித்தும் ஹோல்ம்ஸ் ஒரு முழுமையான பயங்கரவாதி. பயங்கரவாதிகளை ஆதரிப்போரை நாங்கள் பயங்கரவாதிகளாகத்தான் கருதுவோம்.

ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஹோன் ஹோல்ம்ஸ் ஒரு பயங்கரவாதி. சிறிலங்காவின் மதிப்பை அனைத்துலக அளவில் சீர்குலைக்க இந்த நபர் முயற்சிக்கிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஹோல்ம்ஸ் இலஞ்சம் வாங்கியிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக சிறிலங்காவுக்குக் கிடைக்கவிருக்கும் அனைத்துலக கடன் உதவியை தடுக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுவது நாட்டுக்குச் செய்யும் பெரும் துரோகமாகும். அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களும் இதனைக் கண்டித்துள்ளனர்.

2,500 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவிருக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டை சிறிலங்காவில் நடத்துவதைக் குழப்பியடிக்கும் நடவடிக்கையிலும் சில அரச விரோத சக்திகள் ஈடுபட்டு வருகின்றன.

இம்மாநாடு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, இம்மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்நின்று நடத்துபவரான டொக்டர் ஷரீப்தீனின் பெயரில் போலியான குறுந்தகவல் மற்றும் மின் அஞ்சல்கள் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

எனினும் சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அனைத்துலக நாடுகளுக்கு இதுபற்றி தகுந்த விளக்கம் கொடுத்துள்ளார்

"கோப்" அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அரச நிறுவனங்களின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்காக 26 நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றார் அவர்.

ஆனால் புலிகளிடம் ஹோல்ம்ஸ் இலஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டுக்குரிய ஆதாரங்கள் எதனையும் கொழும்பு ஊடகவியலாளர்கள் கூட்டத்தில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே வெளியிடவில்லை.

5 comments:

  1. ஐயோ கடவுளே! சிரிப்பை அடக்க முடியவில்லை..

    மோட்டு சிங்களவனுக்கு புத்தி பேதலிச்சுபோச்சு!

    ReplyDelete
  2. எல்லாம் நன்மைக்கே காலம் பதில் சொல்லும் காலம் வெகுதொலைவில் இல்லை பணம் வாங்குவதில் தங்களைவிட வேறு யாரும் இருகீனம் என நினைகீனம் பாருங்கோ

    கிணற்று தவளை என்பது இதைத்தானா

    ஈழவன்

    ReplyDelete
  3. மோட்டு சிங்களவனுக்கு புத்தி பேதலிச்சுபோச்சு!

    you're right, "the intelligent one" :-(

    btw, he is not a sinhala if we want to stick with the definition.

    ReplyDelete
  4. /* மோட்டு சிங்களவனுக்கு புத்தி பேதலிச்சுபோச்சு! */

    ஜெயராஜ் பெனாண்டபிள்ளை அவர்கள் தமிழர். அவர் சிங்களவர் அல்ல.

    ReplyDelete
  5. தமிழனாகப் பிறந்துவிட்டுச் சிங்கள இன வெறியர்களுக்கு நல்ல பிள்ளயாக இருக்க இவர் உள்றிக் கொட்டுவது ஒன்றே போதும்.உலகம் அவர்களை ந்ன்கு புரிந்து கொள்ள மிகவும் உதவியதற்கு நன்றி சொல்வோம்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.