Thursday, August 16, 2007

தினக்குரல் ஊடகவியலாளர் மோகன் மீது திராவகம் வீச்சு

[வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007] தினக்குரல் ஊடகவியலாளர் கே.பி. மோகன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று திராவகம் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிலங்கா வான்படையினரின் அண்மையில் மோகனைத் தாக்கியிருந்தனர். இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட மோகன் சிகிச்சைக்காக நேற்று புதன்கிழமையன்று பிற்பகல் 1.30 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துவமனைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள், மோகன் மீது திராவகத்தை வீசியுள்ளனர். திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட மோகன் மீண்டும் மருத்துவமனைக்கு ஓடிச் சென்றார். உடனடியாக அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திராவகம் வீச்சில் மோகனின் முகம், முதுகுப் புறம் ஆகியவற்றில் எரிகாயம் ஏற்பட்ட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.