[புதன்கிழமை 8 ஓகஸ்ட் 2007] நேற்று செவ்வாய்கிழமை யாழ் குடாநாட்டிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி ஜோன் ஹோல்ம்ஸ் துணை ஆயுதக் குழுவின் தலைவரும் அமைச்ருமான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஸ்ரீலங்கா படைத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்புகளின் போது யாழ் குடாநாட்டில் இயல்பு நிலை காணப்படுவதாக ஸ்ரீலங்கா அரசாங்க தரப்பு பிரதிநிதிகள் ஜோன் ஹோல்சுக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதன் பின்னர் படை அதிகாரிகள் மற்றும் ஈ.பி.டி.பி துணை ஆயுதக் குழுவின் தலைவர் ஆகியோருடன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஹோல்ஸ் சந்தித்து பேசியுள்ளார். துணை ஆயுதக் குழுவினதும் படை புலனாய்வாளர்களினதும் பிரசன்னத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் யாழ் குடாநாட்டின் உண்மை நிலையை ஹோல்சுக்கு எடுத்துக் கூறுவதற்கு தயங்கியதாக தெரியவந்துள்ளது. மிகக் கவனமாக திட்டமிட்டு ஜோன் ஹோல்ஸ் கலந்து கொண்ட சந்திப்புகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முக்கிய பிரதிநிதியாக அரசாங்கம் முன்னிலைப்படுத்தியதன் மூலம் யாழ் குடாநாட்டில் அரங்கேறும் மனித அவலங்களை வெளிப்படுத்த முடியாத நிலை மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது யாழ்ப்பாணத்தில் செயல்படும் ஈ.பி.டி.பி எனப்படும் துணை இராணுவக் குழுவே ஆட்கடத்தல் மற்றும் படுகொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில் குடாநாட்டின் மனித உரிமை மீறல்களை கண்டறிவதற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஐநா செயலாளரின் பிரதிநிதிக்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் தரப்பினரே வரவேற்பளித்து அவர் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமை யாழ் குடாநாட்டில் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் அவலங்கள் முடிவின்றி தொடரப் போதையே எடுத்துக்காட்டியுள்ளது.
Wednesday, August 08, 2007
ஜ.நா விசேட பிரதிநிதிக்கு யாழ் அவலத்தை எடுத்துக் கூறமுடியவில்லை - மக்கள் பிரதிநிதிகள் கவலை
Wednesday, August 08, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.