Sunday, August 19, 2007

மன்னாரில் படையினர் முன்னேற முயற்சி: விடுதலைப் புலிகள் முறியடிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007] மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் பகுதி ஊடாக சிறிலங்காப் படையினர் முன்னேற்ற நடவடிக்கைக்கான முயற்சிகளை எடுத்தனர். கடந்த இரு நாட்களாக படையினர் முள்ளிக்குளம், விளாத்திகுளம் பிரேதசங்கள் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்கள் மற்றும் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தினர். நேற்று சனிக்கிழமையும், இன்றும் இரு தடவைகள் சிறு முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டனர். இவற்றை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படையினரின் தொடரான எறிகணைத் தாக்குதல்களால் முள்ளிக்குளம், விளாத்திகுளம், வலயன்கட்டு, பரிசங்குளம் ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்களின் வீடுகள் முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.