Monday, August 20, 2007

யாழில் இருவர் சுட்டுக்கொலை

[திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007] யாழ்ப்பாண குடாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமையும் இன்றும் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதி அரசடிச் சந்தியில் இன்று காலை 6.40 மணியளவில் அடையாளம் தெரியாதோரால் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர், ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்கைச் சேர்ந்த சிவசாமி சிறீதரன் வயது (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளர். அலுவலகத்துக்கு இன்று காலை உந்துருளியில் சென்று கொண்டிருந்த போது உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிவசாமி சிறீதரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர். சம்பவ இடத்திலேயே சிவசாமி சிறீதரன் பலியானார். இதில் காயமடைந்த மேலும் ஒருவர் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளார். சிவசாமி சிறீதரன் டெனிஸ் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர் என்று கூறப்படுகின்றது. தீவகம் வேலணை கிழக்கைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று அடையாளம் தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இந்த வர்த்தகர் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். கொல்லப்பட்டவர், வேலணை கிழக்கைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கார்த்திகேசு இராசரட்ணம் (வயது 57) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.