Monday, August 20, 2007

மாலத்தீவு மக்கள் வாக்கெடுப்பில் அதிபரின் கட்சி வெற்றி

[திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007]


மாலத்தீவில் எத்தகைய அரசு இடம்பெற வேண்டும் என்பது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாக மாலத்தீவு அதிபர் மாமூன் அப்துல்கயூமின் கட்சி கூறுகிறது.

அதிகாரபூர்வ முடிவுகளின்ப்படி, நாடாளுமன்ற ஆட்சிக்கு பதிலாக அதிபரின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என்று மக்கள் ஏகோபித்த விருப்பத்தினை தெரிவித்துள்ளனர்.

அதிபர் மாமூன் அப்துல்கயூம் அவர்களும் அதிபரின் ஆட்சியே நீடிக்க வேண்டும் என்று விரும்புகின்றார்.

இந்த வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடைபெற்று இருக்கலாம் என்று தாங்கள் சந்தேகிப்பதாக எதிர்கட்சியினர் கூறுகின்றனர்.

இந்த வாக்கெடுப்பில் எதிர்கட்சிகளுக்கு ஆதரவாக வாக்கு கிடைத்திருந்தால், 29 ஆண்டுகாலமாக இருந்து வரும் அதிபரின் ஆட்சிக்கு விரைவில் முடிவு ஏற்பட்டிருக்கும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.