Monday, August 20, 2007

சமஷ்டித் தீர்வுக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்கும் : லக்ஷ்மன் கிரியல்ல

[திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007] இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி அடிப்படையில் தீர்வு காண்பதாயின் அதற்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இருப்பதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார். கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய சுதந்திர ஊடக சங்கத்தின் ஆறாவது மாநாட்டின் இறுதி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார். 2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டு சமாதானத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகவும், எனினும் தற்பொழுது நிலைமை மிகவும் மோசமடைந்த சமாதானத்துக்கான வழிகள் தடைப்பட்டிருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார். எதுஎவ்வாறு இருந்தாலும் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி மூலமான தீர்வுத் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைத்தால் அதற்கு தாம் ஆதரவு வழங்குவோம் என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.