[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007]
2008 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளை உயர் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குவது பாராளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயலென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று சிறப்புரிமை பிரச்சினையொன்றை முன்வைத்து பேசும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட விவாதங்களுக்கு அமைய எடுக்கப்பட்ட முடிவுகளை கேள்விக்குள்ளாக்கி கல்வி அமைச்சின் செயலாளரை விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருக்கும் நிலையில் அதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் விடயங்கள் பற்றி வெளியில் எவரும் கேள்விக்குள்ளாக்க முடியாதெனவும், பாராளுமன்றமே நாட்டின் உயரிய சபையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரணில் விக்கிரமசிங்க இங்கு மேலும் பேசுகையில்;
2008 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் புதிதாக வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கு எதிராக கொழும்பிலுள்ள கல்லூரியொன்றின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கல்வி அமைச்சின் செயலாளர் உட்பட இன்னும் சிலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், இம் மனுவில் பாராளுமன்றத்தில் தெரிவிக்காத சில விடயங்களை நான் பேசியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எனது பாராளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது, உயர் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட சிபாரிசுகள் புறக்கணிக்கப்பட்டே கல்வி அமைச்சினால் மேற்குறித்த புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட ஒரு விடயத்தை உயர் நீதிமன்றத்துக்கோ அல்லது வேறு எந்த நீதிமன்றத்துக்குமோ கேள்விக்குள்ளாக்க முடியாது. இதை முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்கவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ஆனால், இந்த சிறப்புரிமையை மீறும் வகையில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாணவர் அனுமதி தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டே முடிவெடுக்கப்பட்டுள்ளது. கல்வி கொள்கையை வகுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது. பாராளுமன்றம் தீர்மானிக்கும் விடயங்களை எந்த நீதிமன்றத்திலும் விவாதிக்க முடியாது. எனவே, மேற்குறித்த வழக்கை தடுத்துநிறுத்த பாராளுமன்ற செயலாளர் மூலம் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு சபாநாயகர் அறிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் மேற்கொள்ளும் தீர்மானமொன்றை, உயர் நீதிமன்றத்திலிருக்கும் இருவரால் மாற்ற முடியாது. அத்துடன், இவ்விடயத்தில் கல்வி அமைச்சின் செயலாளரை நீதிமன்றம் அழைப்பதென்றால் கல்வி அமைச்சர் அவசியமில்லைதானே, அவர் இங்கு பொம்மை போலவா அமர்த்தப்பட்டிருக்கிறார். எனவே, இது தொடர்பில் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேநேரம், எதிர்க்கட்சித் தலைவரின் கூற்றுக்கு பதிலளிக்கும் முகமாக பேசிய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சின் செயலாளருக்கு உயர் நீதிமன்றத்தால் அழைப்பானை விடுக்கப்பட்டிருப்பதற்கு அமைய அவர் உயர்நீதிமன்றம் செல்ல வேண்டியிருப்பதாகவும், எனினும், பாராளுமன்ற உறுப்பினர்களின் இணக்கப்பாட்டுக்கு அமையவே 2008 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை சேர்ப்பதற்கான புதிய சுற்றுநிருபம் வெளியிடப் பட்டதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம், உயர் நீதிமன்றத்தின் அழைப்பை கல்விச் செயலாளர் ஏற்க வேண்டிய அதேநேரம், பாராளுமன்றத்தின் அதிகாரங்களை பாதுகாக்கும் பொருட்டு சிறப்புரிமையை மீறியமைக்காக மனுதாரரை அழைத்து விளக்கம் கோர வேண்டுமென தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க பிள்ளைகளின் கல்வி பிரச்சினைகளை சட்டங்கள் மூலம் தீர்த்துவிட முடியாதெனவும், அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.