Sunday, August 19, 2007

கருணா குழுவினரே செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களை கொலை செய்தனர்

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007]


சிறிலங்கா தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இரு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்களின் கொலை தொடர்பாக சிறிலங்கா காவல்துறையினரால் தேடப்படும் சரன் என்று அழைக்கப்படும் சிவகாந்தன் விவேகானந்தன் என்பவர் துணை இராணுவ குழுவான கருணா குழுவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கொல்லப்பட்ட பணியாளர் ஒருவர் கருணா குழுவைச் சேர்ந்த மகேஸ் என்பவரது நெருங்கிய உறவினர் ஆவார். தனிப்பட்ட விரோதமே இந்த கொலைக்கான காரணம் எனவும் கூறப்படுகின்றது.

இதனிடையே சந்தேக நபர் தொடர்பான தகவல்களை தருபவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய்களை சன்மானமாக வழங்கப்படும் என சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.