[ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2007]
யாழ். மாவட்டத்தில் உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளின் மீது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலில் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு பத்தியில் தெரிவித்துள்ளது.
அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கி மற்றும் மோட்டார் படைவலு அதிகரித்துள்ள நிலையில் யாழ். குடாநாட்டில் உள்ள தெரிவு செய்யப்பட்ட இலக்குகளான படை உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல் முலம் குறிவைப்பதற்கு அவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறீ அங்கு உள்ள முன்னணி பாதுகாப்பு நிலைகளுக்குச் சென்ற போதும் விடுதலைப் புலிகள் நிகழ்த்திய பீரங்கித் தாக்குதலில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளார். இந்த சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன் அதனை பாதுகாப்பு தரப்பினர் மூடி மறைக்கவும் முற்பட்டுள்ளனர்.
முன்னர் விடுதலைப் புலிகள் இராணுவத் தளபதியான லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை குறிவைத்திருந்தனர். கடந்த ஆண்டு ஏப்பிரல் 25 ஆம் நாள் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்திருந்தார். இதனால் அவர் மூன்று மாதங்கள் பணியில் இருந்து அகற்றப்பட்டிருந்தார். அவர் அதற்கு முன்னரும் இரு தடவைகள் கடுமையாக காயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொன்சேகா காயமடைந்திருந்த வேளையில் இராணுவத்தின் பிரதி தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் பரமி குலதுங்கா மற்றுமொரு தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
எதிர்கால இராணுவத் தளபதியாக வருவதற்குரிய தகுதி உடைய ஜெனரல் சந்திரசிறீ இந்த வாரம் நடைபெற்ற தாக்குதலில் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சந்திரசிறீயின் நடமாட்டங்களை படையினர் தரப்பில் உள்ள தகவல் வழங்குபவர்களின் உதவியுடன் விடுதலைப் புலிகள் அவதானித்து வந்துள்ளனரா என்பது தொடர்பான விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம்.
இராணுவத்தினர் தற்போது தமது படையினரையும், விடுதலைப் புலிகளையும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். விடுதலைப் புலிகள் முன்னர் தற்கொலை குண்டுதாரிகளை மிகவும் திறமையாக பயன்படுத்தி வந்திருந்தனர். தற்போது அதற்கு அடுத்தபடியான தெரிவாக இராணுவ உயர் அதிகாரிகளை பீரங்கித் தாக்குதல்கள் மூலம் குறிவைப்பதை மேற்கொண்டு வருகின்றனர்.
பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்ட இணைப்பு புள்ளிகளை கொண்டு இலக்கை நோக்கி மிக அதிகளவான பீரங்கித் தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி வருவது தெளிவானது. அண்மைய காலத்திலும் அவர்கள் இத்தகைய தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியதற்கு இரு உதாரணங்களை கூறலாம்.
முதலாவதாக இந்த வருடம் பெப்ரவரி மாதம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற கவசத் தாக்குதல் படைப் பிரிக்கேட்டின் உத்தியோகபூர்வ வைபவத்தின் போது நடத்தப்பட்ட பீரங்கித் தாக்குதலை குறிப்பிடலாம். இந்த தாக்குதலில் அந்த பிரிக்கேட்டின் கட்டளை அதிகாரியான லெப். கேணல் ரால்ஃப் நுகேரவும் அவரது இரு கட்டளை தளபதிகள் உட்பட 13 படையினரும் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் பளை, பூநகரி உட்பட மூன்று திசைகளில் இருந்து நடத்தப்பட்டிருந்தன. அன்று காயமடைந்தவர்களில் ஒரு கட்டளை தளபதி மீண்டும் பணிக்குத் திரும்பிய போதும் மற்றைய கட்டளை அதிகாரியும், லெப். கேணல் ரால்ஃப் நுகேரவும் இன்றுவரை கடமைக்குத் திரும்பவில்லை. தற்போது 53 ஆவது படையணியின் 1 ஆவது பிரிக்கேட்டின் பிரதி கட்டளை அதிகாரியாக கஜபா ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த லெப். கேணல் சாந்தா திசநாயக்க கடமையாற்றி வருகின்றார்.
இரண்டாவது உதாரணமாக, ஊடகவியலாளர்களை முகமாலை முன்னணி நிலைகளுக்கு படையினர் அழைத்துச் சென்ற போது நடைபெற்ற பீரங்கித் தாக்குதலை குறிப்பிடலாம். துருப்புக்காவி கவச வாகனங்களில் ஏற்றிச்செல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் பீரங்கி எறிகணைகள் சரமாரியாக வீழந்து வெடிக்க தொடங்கியதுடன், அங்கு காவல் கடமையில் நின்ற படையினரும் பலியாகியிருந்தனர்.
விடுதலைப் புலிகளிடம்
122 மி.மீ பீரங்கிகள் - 22
152 மி.மீ நீண்டதூர பீரங்கிகள் - 02
130 மி.மீ பீரங்கிகள் என்பன உள்ளதுடன் அதன் மூலம் துல்லியமான பீரங்கி தாக்குதல்களை நடத்தக்கூடிய பலமும் அவர்களிடம் உண்டு.
கண்காணிப்பு செய்மதிகளின் மூலம் பெறப்படும் உடனடியான நம்பகமான படங்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனரா என்பது தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினரும் ஏனைய தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டு கண்டறிய வேண்டும். இந்த படங்களை பல நாடுகளில் உள்ள செய்மதிகளை பயன்படுத்தும் நிறுவனங்களிடம் இருந்து அதிக செலவில் கொள்வனவு செய்ய முடியும். இத்தகைய நாடுகளில் அதிக தமிழ் மக்கள் வாழும் பிரான்ஸ் நாடும் அடங்கும்.
தேவையான அளவு நிதி வசதிகள் உள்ள போது விடுதலைப் புலிகள் ஒரு போதும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கு பின்னிற்பதில்லலை. சில சந்தர்ப்பங்களில் படையினரை விட தொழில்நுட்பத்தில் முன்னணியில் விடுதலைப் புலிகளே நிற்கின்றனர். அதன் பின்னரே படையினர் அதனை பின்பற்றுகின்றனர். படையினருக்கான நிதிப் பற்றாக்குறையே இதற்கான காரணம்.
இதனிடையே, மடு தேவாலய உற்சவ காலத்தை முன்னிட்டு மடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்தத்தை அடுத்து களமுனையில் அமைதி நிலவுகின்றது. எனினும் பரப்புக்கடந்தான், கல்மடு போன்ற மடுவை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது கனரக பீரங்கிகளை நகர்த்தியுள்ளதாக படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் படையினரின் முன்னேற்றங்களை தடுக்கும் பொருட்டு முன்னணி பாதுகாப்பு நிலைகளில் அவர்கள் துருப்பு எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் பொறிவெடிகளை புதைத்து வருகின்றனர்.
வன்னியில் இராணுவத்தினரின் நடவடிக்கைக்காக விடுதலைப் புலிகள் காத்திருப்பதுடன், பதில் தாக்குதலுக்கான சரியான நேரத்திற்கும் அவர்கள் காத்திருக்கின்றனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.