[திங்கட்கிழமை, 6 ஓகஸ்ட் 2007] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் நேரடி மோதல் நடைபெற்றதாக சிறிலங்காவின் பாதுகாப்புக்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: திருகோணமலை பான்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் சிறிலங்காஇராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அப்பகுதியில் புலிகளுடன் நடைபெற்ற நேரடி மோதலின் பின்னர்; மேற்கொள்ளப்பட்ட இத் தேடுதல் நடவடிக்கையின் போது ரி.56 ரக துப்பாக்கி ஒன்று, அற்குப் பயன்படுத்தும் மகஸின் ஒன்று மற்றும் புலி உறுப்பினர்கள் பயன்படுத்தும் பைகள் இரண்டு ஆகியன மீட்கப்பட்டுள்ளன. இம்மோதலின் போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். யாழ். வலிகாமம் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதும் கனரக ஆயுதங்கள் பலவற்றை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். ஆர்.பி.ஜி. துப்பாக்கி ஒன்று, மைக்ரோ பிஸ்டல் ஒன்று, ரி.56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் கிரனேட் குண்டுகள் நான்கு ஆகியன மீட்கப்பட்டதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, August 06, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.