Sunday, August 26, 2007

மனித உரிமைகள் குறித்து மாதாந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படும் : ஜீவன் தியாகராஜா

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007] அரசசார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் துப்பாக்கிச் சூடுகள், தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக உயர்மட்ட அரசாங்க அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கவனம் செலுத்தியதாக அரசசார்பற்ற அமைப்புக்களின் இணையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். யாழ் குடாநாட்டில் டனிஷ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் உள்ள+ர் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மறுதினமே இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த வருடம் ஜனவரி முதல் ஜுலை வரை இடம்பெற்ற படுகொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் எல்லைமீறிச் சென்றுவிட்டன. மோசமான இந்த நிலையைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜீவன் தியாகராஜா அந்த ஊடகத்திடம் கூறினார். இலங்கையில் இடம்பெறும் படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகக் கணக்கெடுப்புக்களை மேற்கொண்டு மாதாந்தம் அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்கு மனித உரிமை அமைப்புக்களின் இணையம் தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட மாதத்தில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாக ஆய்வுகளை நடத்தி அறிக்கை தயாரிக்கவுள்ளோம். இடம்பெறும் சம்பவங்களின் எண்ணிக்கைகளை இலகுவில் புறக்கணித்துவிட முடியாது. ஏனெனில் பெரும் எண்ணிக்கையிலான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றார் ஜீவன் தியாகராஜா. யாழ்ப்பாணத்தில் டனிஷ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் பணியாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த ஊடகத்திடம் கருத்துத் தெரிவித்த அவர், அண்மையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் உயிரிழந்த அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைந்த காலத்தில் அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றார். இதேவேளை, டனிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பு யாழ் குடாநாட்டிலுள்ள பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குடாநாட்டில் தமது பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதுடன், அடுத்த மாத ஆரம்பத்தில் மீண்டும் ஆரம்பிகத் தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.