Sunday, August 26, 2007

யாழ் மாநகரசபை பகுதி மக்களுக்கு புதிய விசேட அடையாள அட்டைகள்

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007] யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கும் 51-2 பிரிகேட் படைப்பிரிவு தலைமை அலுவலகத்திற்கு அருகில் வதியும் பொதுமக்களுக்கும் விசேட அடையாள அடடைகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கியிருப்பதாக உள்ளுர் ஊடகங்களுக்கு சிறீலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். மாநகரசபைக்கு உட்பட்ட ஏனைய பகுதிகளுக்கும் எதிர்வரும் செப்ரம்பர் 8ம் திகதி வரை விசேட அடையாள அட்டைகள் வழங்கப்படும் எனத் தெரியவருகிறது. கிராம அலுவலர், காவல்துறையினர் மற்றும் சிறீலங்கா படையினர் ஆகியோர் இதற்கு தேவையான விபரங்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்ட பிரதேசத்தை சேர்ந்த பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் துரையப்பா விளையாட்டு அரங்கில் இரு கடவுச்சீட்டுக்கு உபயோகப்படுத்தும் புகைப்படத்துடன் செல்லுமாறு கேட்க்கப்பட்டதாகவும் இராணுவத்தினர் கிராமசேகவர் மற்றும் பிரதேசசெயலர் முன்னிலையில் மக்களிடம் இருந்து விடயங்களை பதிவுசெய்து அடையாள அட்டைகளை வழங்கிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.