Sunday, August 26, 2007

வவுனியாவில் கைதான 50 இளைஞர்கள் நீதிபதியின் உத்தரவையடுத்து விடுதலை.

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007] வவுனியாவில் அண்மைக்காலமாக இராணுவம் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புத் தேடுதலில் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட 50 இளைஞர்களை விடுதலை செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமதி எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். வவுனியா வீரபுரம் பகுதியில் 10பேரும், பட்டாணிச்சூர் கிராம பகுதியில் கைதான 10 பேரும், சிதம்பரபுரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 10பேரும் மற்றும் வவுனியா நகரப்பகுதிகளில் கைதான ஏனையோருமே விடுதலைசெய்யப்பட்டவர்களாவர். இவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்துள்ளதாகவும் இவர்கள் ஏதாவது குற்றச் செயல்களை புரிந்துள்ளார்களா அல்லது தேடப்பட்டு வருகிறார்களா என கொழும்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் விசாரணை முடிவடையாதபடியால் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிசார் விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பத்i நிராகரித்த நீதிபதி எம்.இளஞ்செழியன், அரசியல் அமைப்பு சட்டத்தின்படி ஒருவரை கைதுசெய்யும்போது அவர் என்ன குற்றம் புரிந்துள்ளார் என அவருக்கு விளங்கப்படுத்தியதன் பின்னரே கைது செய்யவேண்டும் எனவும் இங்கே கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கும் இளைஞகள் தற்சமயம் ஒரு குற்றமும் புரியவில்லை என்ற தெரிவித்ததோடு, அவர்கள் குற்றம் புரிந்தார்களா என கொழும்பில் அறிக்கை போரிய பின்னரே கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும்இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணானது என்ற தனது விளக்கத்தில் தெரிவித்த நீதிபதி, நீதிவான் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட பொலிஸ் அறிக்கையில் கைதுசெய்யும்போது அவர்கள் ஒரு குற்றமும் புரிந்திருக்கவில்லை என தெட்டத்தெளிவா தொவித்தாகவும், ஆகவே இவர்களை விளக்கமறியலில் வைக்க முடியாது என்றும் கூறி மேற்படி இளைஞர்களை விடுதலை செய்ய பணித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.