Tuesday, August 14, 2007

யாழில் தொடரும் படுகொலைகள்

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007] யாழ்ப்பாணத்தில் இன்றும் அடையாளம் தெரியாத நபர்களால் இளைஞர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வலிகாமம் சங்கானைச் சந்தை அருகே சுன்னாகத்தைச் சேர்ந்த தியாகராஜா விமலராஜா (வயது 30) இன்று செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் உந்துருளியில் தப்பிச் சென்றுள்ளனர். சங்கானைச் சந்தையின் குத்தகை மேற்பார்வைக்காக சந்தைக்குச் சென்ற போதுஇச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தச் சந்தையோடு இணைந்ததாக சிறிலங்கா இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ளனர். மல்லாகம் மாவட்ட நீதிபதி சறோஜினி இளங்கோவன் மரண விசாரனை மேற்கொண்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் விமலராஜhவின் உடல் வைக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.