Tuesday, August 14, 2007

மதவாச்சியில் 5 சிறிலங்கா காவலரண்கள் மீது தாக்குதல்: 5 பேர் படுகாயம்

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007] வவுனியா மதவாச்சிப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையின் காவலரண்கள் மீது இன்று அதிகலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஐந்து காவல்துறையினர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதவாச்சியில் இருந்நு மன்னாருக்கு செல்லும் வீதியிலேயே இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்துள்ளது. படுகாயமடைந்த சிறிலங்கா காவல்துறையினரை வவுனியா மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். அப்பகுதியில் இருந்த ஐந்து காவலரண்கள் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான காவலரண் அமைந்திருந்த பகுதிக்கு மேலதிக காவல்துறையினரும், இராணுவத்தினரும் சென்று பாரிய தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.