Thursday, August 16, 2007

மிக் கொள்வனவு விவகாரம்: சிறிலங்கா வான்படை தளபதியுடன் விசாரணை ஆணைய அதிகாரிகள் சந்திப்பு

[வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007] சிறிலங்கா வான்படைத் தளபதியை ஊழல் தடுப்பு விசாரணை ஆணைய அதிகாரிகள் நேரில் சந்தித்துள்ளனர். மிக்-27 ரக வானூர்தி கொள்வனவு தொடர்பாக உரிய ஆவணங்களைத் தராமல் சிறிலங்கா அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்வதாக அண்மையில் விசாரணை ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சிறிலங்கா வான்படைத் தளபதி ரொசான் குணதிலக்கவை நேரில் சந்தித்து ஆவணங்களைக் கையளிக்குமாறு விசாரணை ஆணையத்தினர் கோரியுள்ளனர். உரிய ஆவணங்களைக் கையளிப்பதாகவும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் விசாரணை ஆணைய அதிகாரிகளிடம் ரொசான் குணதிலக்க கூறியுள்ளார். இதனிடையே ஆவணங்களை வழங்குமாறு சிறிலங்கா அரச தலைவர் ஆணையத்துக்கும் விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. நன்றி : புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.