[வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்து அந்த நாடுகளின் அரசாங்கப் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து இலங்கை நிலைமைகள் தொடர்பாக விளக்கம் அளித்தது. இலங்கையில் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், அறவிடுதலுக்கான கடத்தல்கள், காணாமல் போதல், மக்கள் குடியிருப்புக்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள்- பொது இடங்கள் ஆகியன மீதான தாக்குதல்கள், வாழ்வாதாரங்களை சீர்குலைத்தல், விவசாயம் மற்றும் மீன்பிடி செயற்பாடுகளுக்குத் தடை விதித்தல், தொடர்ச்சியான வான்குண்டு மற்றும் எறிகணைத் தாக்குதல், பல்குழல் உந்துகணைத் தாக்குதல்கள், தமிழ் மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியன கிடைக்காமல் தடை செய்தல் உள்ளிட்ட தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் குறித்து விளக்கம் அளித்தோம். சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவத்தின் நடவடிக்கை மற்றும் இராணுவ வழித்தீர்வு தொடர்பிலான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்து விளக்கம் அளித்தோம். மேலும் அனைத்துலகத்தின் அறிவுறுத்தலை மீறி வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்டமை, சிறிலங்காவின் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் செயற்பாடுகள் ஆகியன தொடர்பிலும் ஐரோப்பிய நாடுகளிடம் தெரிவிக்கப்பட்டது. இக்குழுவில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, ஜி.ஜி.பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.