[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007] திருகோணமலை சாம்பல்தீவில் கப்பம் அறவிடச் சென்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரை இலக்கு வைத்து இன்று நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே அக்குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயமடைந்தார். திருகோணமலையில் முகாம் அமைத்துள்ள கருணா குழுவினர் சாம்பல்தீவுப் பகுதிக்கு இந்த வார தொடக்கத்தில் சென்று அங்குள்ள வாகன உரிமையாளர்களிடம் கப்பம் தரவேண்டும் என்று எச்சரித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வாகனம் ஒன்றிலும் உந்துருளி ஒன்றிலும் கருணா குழுவைச் சேர்ந்த சிலர் சாம்பல்தீவுப் பகுதிக்கு இன்று வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். படுகாயமடைந்த அக்குழுவைச் சேர்ந்த மற்றொருவர் திருகோணமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து கருணா குழுவினர் தப்பியோடியுள்ளனர். இதனிடையே திருகோணமலையில் இன்று பிற்பகல் 1:30 மணியளவில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் வாகனம் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளார். திருகோணமலை வடக்கைச் சேர்ந்த சுபாஸ் சந்திரபோஸ் (வயது 35) என்பவர் கடத்ததப்பட்டிருப்பதாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நன்றி : புதினம்
Thursday, August 23, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.