[வியாழக்கிழமை, 23 ஓகஸ்ட் 2007] சிறிலங்காவின் காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் குற்றவியல் சட்டமூலத்தை சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று வியாழக்கிழமை நிறைவேற்றியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் மூலம் காவல்துறையினர் ஒருவரை கைது செய்து 48 மணி நேரம் வரை தமது கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 24 மணி நேரத்துக்குள் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற சட்டம் இருந்தது. இந்த சட்டத்தையே மாற்றி 48 மணிநேரம் வரை ஒருவரை காவல்துறையினரின் காவலில் வைக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியை கைது செய்து விசாரணை செய்யும்போது அந்த நபர் பற்றிய விபரங்களை உடனடியாக வெளியிடாமல் இருப்பதற்கும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. வெடிமருந்துகளை வைத்திருப்பவர்கள், கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், கொலைச் சம்பவங்கள் மற்றும் இதர சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர். இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் டிலான் பெரேரா நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார். இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக மகிந்தவுடன் இணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளும் வாக்களித்தன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. மொத்தம் 99 வாக்குகள் இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக கிடைத்தன. ஐக்கிய தேசிய கட்சியும், ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. 57 வாக்குகள் மட்டும் எதிராக கிடைத்தன. 42 மேலதிக வாக்குகளால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
Thursday, August 23, 2007
சிறிலங்கா காவல்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கும் சட்டம் நிறைவேற்றம்
Thursday, August 23, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.