[வியாழக்கிழமை, 16 ஓகஸ்ட் 2007] ஜக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் பற்றி மகிந்த ராஜபக்ச அமைச்சரவையின் பேச்சாளரும், அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ள கருத்துக்கள் உலக அரங்கத்தில் சிறிலங்காவை தலைகுனிய வைக்கும் என்று அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பெ.சந்திரசேகரன் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உலக நாடுகள் அனைத்தும் அங்கத்துவம் வகித்து முழுமையாக கௌரவிக்கும், ஜ.நா சபையில் பொறுப்பான பதவி வகிக்கும் ஒருவரை பயங்கரவாதி என்றும் புலிகளிடம் கப்பம் பெற்றுள்ளார் என்றும் பொய்யன் என்றும் வர்ணித்திருப்பது, முழு ஜ.நா சபை முயற்சிகளையும் அவமானப்படுத்துகின்ற வார்த்தைகளாகவே கருதவேண்டியுள்ளது. உச்ச கட்டமாக அந்த அதிகாரி மீண்டும் இலங்கை வருவதை மக்களே தீர்மானிப்பார்கள் என கூறியிருப்பது வெளிப்படையான அச்சுறுத்தலாகும். கூலிப்படைகளை வைத்துக்கொண்டு ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், தாக்கப்படுதல், அசிட் வீசுதல் போன்றவற்றின் பின்னணியில் அரசே இருந்து செயற்படுகின்றது என்பது ஏற்கனவே எழுந்துள்ள குற்றச்சாட்டாகும். இதனை மெய்ப்பிப்பது போலவே 'மக்கள் தீர்மானிப்பார்கள்' என்ற கருத்தானது மக்கள் எனக் கூறிக்கொண்டு அரசு எதையோ செய்ய முற்படுகின்றது என்பது பல அரசியல் அவதானிகளின் கணிப்பாகும். ஏற்கனவே இலங்கை விவகாரத்தில் அக்கறை காட்டும் பல நாடுகளின் நிலைப்பாட்டை கேலிக்கிடமாக்கியுள்ள நிலையில், அமைச்சரின் தற்போதைய வாக்குமூலம் ஜ.நா சபையையும் பகைத்துக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றது. உலக நாடுகளின் பிரதநிதிகள் இலங்கையைப் பற்றி கருத்து கூறுகையில் அதில் பொதிந்திருக்கும் உண்மைகளை கண்டறிய முடியாமல் கண்மூடித்தனமாக உதாசீனப்படுத்துவது எமது நாட்டுக்கும் எதிர்காலத்திற்கும் பாரதூரமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும். அரசினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள நடவடிக்கைகளை ஆதரிப்பதுதான் ஏனைய நாடுகளின் கடமையென எவராவது கருதுவார்களேயானால் அதற்குரிய தாக்கத்தை சந்தித்தேயாக வேண்டும். புலிகளை பயங்கரவாதிகள் என்றும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை அவமானப்படுத்தியும் வந்துள்ள இனவாத தேசிய கட்சிகள்கூட இன்று தமிழர்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கவேண்டும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேசத்தின் கருத்துக்களை உதாசினப்படுத்துவது நாட்டுக்கு எவ்விதத்திலும் நன்மை புரிவதாக அமையாது தமிழர்களுக்காக எவராவது, எந்த நாடாவது எதையாது பேசினால் அவர்கள் நாட்டுக்கு எதிரானவர்களென்று சாயம்பூசுகின்ற நிலைப்பாட்டைக் கண்டுகொள்ளாமல் விடக்கூடியளவு தமிழ் அரசியல் கட்சிகள் தன்மானம் அற்றவர்களென கருதிவிடக்கூடாது என்று சந்திரசேகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். நன்றி : புதினம்
Thursday, August 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.