Wednesday, August 29, 2007

லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு

[புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவித்தனர். முழங்காவில் தேசியப் பணிக்குழுச் செயலாளர் ஈழத்தமிழ்மணி, நாச்சிக்குடா சென்மேரீஸ் விளையாட்டுக் கழகத்தலைவர் சசி ஆகியோர் வீரவணக்க உரைகளை ஆற்றினர். மலர் வணக்கத்தைத் தொடர்ந்து மாவீரரின் வித்துடல் முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது.

3 comments:

  1. தாயகத்தின் விடுதலைக்காக தனது இன்னுயிரை ஈந்த இந்த வீரவேங்கைக்கு வீரவணக்கங்கள்.

    ReplyDelete
  2. விடுதலைப் பயிருக்காக விதையான மாவீரனுக்கு எங்களின் வீர வணக்கங்கள்!. உங்கள் விடுதலைக் கனவுகள் விரைவில்! நிறைவேறட்டும்!.

    ReplyDelete
  3. வீரத்தின் விளை நிலமே உமக்கெனது வீர அஞ்சலிகள். உங்கள் பாத அடிச்சுவட்டில் நாம்.

    ஜானா

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.