Tuesday, August 14, 2007

60 முப்படையினர் கடந்த மாதம் பலி சபையில் பிரதமர் அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007] வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் கடந்த ஒரு மாதத்தில் பொலிஸார் மற்றும் முப்படையினர் 60 பேரும் பொது மக்கள் 41 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சபையில் தெரிவித்தார். பொலிஸார் உட்பட முப்படையினர் 223 பேரும் பொது மக்கள் 32 பேரும் காயமடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணையை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும்போதே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.