Sunday, August 26, 2007

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண பிரிட்டன் புதியதிட்டம் தயாரிப்பு.

[ஞாயிற்றுக்கிழமை, 26 ஓகஸ்ட் 2007]

இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொள்ளப்போகும் திட்டங்களை அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கிய இராச்சியத்தின் உபாயங்கள் (பி.பி.எஸ்) என தலைப்பிடப்பட்டுள்ள இத்திட்டத்தை பிரிட்டனின் வெளிவிவகார பொதுநலவாய அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, சர்வதேச அபிவிருத்திக்கான திணைக்களம் ஆகியன இணைந்து வரைந்துள்ளன.

நான்கு முக்கிய விடயங்கள் குறித்து இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. பேச்சுவாhத்தை மூலமான சமாதானத்திற்கு கூடுதலாக அர்ப்பணித்தல், மனித உரிமைகளுடன் சமூகங்களின் பாதுகாப்பை முன்னேற்றுதல், நிரந்தர சமாதானத்திற்காக முக்கிய நிறுவனங்களில் குறிப்பாக, பாதுகாப்புத் துறையில் மறுசீரமைப்பு, சமாதான கட்டமைப்பில் மேலும் வினைத்திறனுடன் செயற்படும் வகையில் சிவில் சமூகத்தை பலப்படுத்தல் ஆகியனவே இவையாகும். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக பிரிட்டன் எப்படி உதவவுள்ளது என்பது குறித்து இதில் விளக்கப்பட்டுள்ளது.

“சமாதான நடவடிக்கைகளில் - குறிப்பாக வட அயர்லாந்து விவகாரத்தில் நாம் கொண்டுள்ள அனுபவம் பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு போன்ற முக்கிய துறைகளில் நாம் கொண்டுள்ள நிபுணத்துவம் இலங்கையுடனான எமது கலாசார உறவுகள் ஆகியன இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவுவதாற்கான நல்லதொரு நிலையில் எம்மை வைத்துள்ள” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசியல் செயன்முறைகளின் மூலமே இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் வன்முறைகளின் பின்னணியில் அரசியல் செயன்முறைகளை முன்னெடுக்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு சகலதரப்புக்களினதும் ஈடுபாடு முக்கியமானது. சமாதான முயற்சிகளில் நோர்வேக்கு உதவுவதுடன் ஐரோப்பிய யூனியன் ஐ.நாகள் ஆகியவற்றில் பிரிட்டனின் அங்கத்துவத்தின் மூலம் சர்வதேச ரீதியாக சமாதான முயற்சிகளுக்கு உதவும் சூழலை ஏற்படுத்துவோம் என தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.