[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007]
....................................யாழ்ப்பாணத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கைதடிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தம்பையா சந்திரமோகன் (வயது 28) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் சாவகச்சேரி நீதிபதியின் விசாரனையைத் தொடாந்து யாழ். போதனா மருத்துவமனையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற கிராம அலுவலரான க.செல்லையா (வயது 65) தனது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் இன்று முற்பகல் 11 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைதடி கிழக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜெயதாஸ் ரூபன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை சுட்டுக்கொல்லப்பட்டார்.
சிறிலங்கா இராணுவத்தினர் அதிகம் நடமாடும் அப்பகுதியில் உந்துருளியில் சிவில் உடையில் வந்த இராணுவப் புலனாய்வாளர்களுடம் துணை இராணுவக் குழுவினரும் இப்படுகொலைகளைச் செய்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணம் புனித பற்றிக்ஸ் கல்லூரிக்கு முன்பாக இன்று காலை 6.45 மணியளவில் இளம் குடும்பஸ்தரான குருநகர் இராஜசிங்கம் வீதியைச் சேர்ந்த கே.தேவராசா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார ஊழியராகப் பணியாற்றியவர்.
இன்று காலை தனது வீட்டில் இருந்து கடமைக்குச் செல்லும் வழியில் அவர்மீது உருந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பியுள்ளனர். யாழ். மாவட்ட நீதிபதியின் விசாரணைக்குப் பின்னர் தவராசாவின் சடலம், யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள சத்திரத்துச் சந்திக்கு அண்மித்த பகுதியில் கடை ஊழியர் ஒருவர் மீது இன்று முற்பகல் 11 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியுள்ளனர். இதில் படுகாயமடைந்தவர் வேலணை 6 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சின்னராசா விஜயசிங்கம் (வயது 30) என தெரியவந்துள்ளது. அவர் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே சிறிலங்கா இராணுவத்தினர் விடுத்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக கைதடி கோப்பாய் பகுதியைச் சேர்ந்த மூவர் இன்று பகல் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆனைக்குழுவிடம் சரணடைந்துள்ளனர்.
அவர்களுடைய வீடுகளுக்குச் சென்ற சிறிலங்கா இராணுவத்தினர் வீடுகளை சோதனையிட்டுவிட்டு அடையாள அட்டைகளை பெற்றுச் சென்றதாகவும் அதனைத் தொடாந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதனால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாங்கள் சரணடைந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சரணடைந்த மூவரும் யாழ். சிறிலங்கா காவல் நிலையம் மூலம் யாழ். நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்படவுள்ளனர்.

மூலம்: புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.