[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007]
வவுனியா மாவட்டம் நெடுங்கேணி, பட்டிக்குடியிருப்பில் சிறிலங்கா வான் படையின் மிக்-27 ரக வானூர்தி, பயணிகள் பேருந்து மீது நடத்திய வான் குண்டுத்தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பட்டிக்குடியிருப்பில் பயணிகளை ஏற்றி நின்ற பேருந்து மீது இன்று திங்கட்கிழமை காலை 6.40 மணிக்கு மிக்-27 ரக வானூர்தி குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால் மக்கள் பேரூந்திலிருந்து சிதறி ஓடினர். பேரூந்துக்குள் சிக்கிய இளம் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். மேலும் பத்துக்கும் அதிகமான பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியைச் சேர்ந்த கரும்புள்ளியான் கிராமத்தைச் சேர்ந்த அரியரத்தினம் சுபாஜினி (வயது 20) படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் நிலையில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்தார்.
சிறிலங்கா வான்படை திட்டமிட்டு மக்களை இலக்கு வைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் அப்பகுதியில் வான்குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் மிக்-27 ரக வானூர்திகளின் தாக்குதல்களில் கற்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
அதேபோல் கற்குளம் சந்தியில் உள்ள பல நோக்கு கூட்டுறவுச்சங்க கிளை மற்றும் அரிசி ஆலை ஆகியனவும் கடுமையான சேதங்களுக் உள்ளாகின. அரிசி ஆலையில் அரைக்கும் இயந்திரங்கள் சேதமாகியும் அரிசி மூட்டைகள் எரிந்தும் போயுள்ளன.

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.