[திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007] வவுனியாவில் சிறிலங்கா ஊர்காவற் படையினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். வவுனியா உலுக்குளம் சுமதிபுரப் பகுதியில் உள்ள வீதித்தடையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.50 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றது. இந்த வீதித்தடையில் நின்றிருந்த சிறிலங்கா காவல்துறையினர் மற்றும் ஊர்காவற் படையினர் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படையினரின் ஆக்கிரமிப்பு சிங்களக் குடியேற்றப்பகுதியில் ஜீப்பில் ஆயுதங்களுடன் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி வீதித்தடையை நெருங்கியதும் ஊர்காவற் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் பெண் ஊர்காவற் படையைச் சேர்ந்த மூவரும், ஆண் ஊர்காவற் படையைச் சேர்ந்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூட்டின் இடையில் அகப்பட்டு ஓட்டுநர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையைச் சேர்ந்த ஒருவரும், பெண் ஊர்காவற் படையைச் சேர்ந்த ஒருவரும் இதில் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட ஓட்டுநர் சிங்களவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. படையினரைப் போன்று உருமறைப்பு செய்து வந்தே விடுதலைப் புலிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
Monday, August 20, 2007
வவுனியாவிற்குள் ஜீப்பில் சென்று புலிகள் தாக்குதல்: 4 ஊர்காவற் படையினர் பலி
Monday, August 20, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.