[திங்கட்கிழமை, 20 ஓகஸ்ட் 2007] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும், வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதுதான் ஓட்டமாவடிப் பகுதியில் வைத்துக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஓட்டமாவடிப் பகுதியில் காணப்பட்ட இவரது சடலத்தை அப்பகுதி மக்கள் எடுத்து வந்து வாழைச்சேனை மருத்துவமனையில் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலை சுமார் 7.00 மணியளவிலேயே சம்பவம் இடம்பெற்ற போதிலும் இரவு 9.00 மணிக்குப் பின்னர்தான் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது. கொலை அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார். கடந்த வருடம் ஜூலை மாதம் 21 ஆம் நாள், சே.ஜெயானந்தமூர்த்தியின் இல்லத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல் ஒன்றில் அவரும், அவரது குடும்பத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி : புதினம்
Monday, August 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.