[திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007]
திருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினரின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் 3 டோராப் பீரங்கிப் படகுகள் சேதமடைந்துள்ளன.
புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் 20 டோராக்களைக் கொண்ட கடற்படை அணிமீது கடற்புலிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிமுதல் அதிகாலை 2.30 மணிவரை தாக்குதலை நடத்தினர்.
கடற்புலிகளின் தீவிர தாக்குதலில் 3 டோராப் பீரங்கிப் படகுகள் சேதமாக்கப்பட்டன. டோராப் பீரங்கிப் படகு அணியினை திருகோணமலை வரை கடற்புலிகள் விரட்டிச் சென்றனர்.
இத்தாக்குதலில் கடற்புலிகள் தரப்பில் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் மணலாறு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகள் மீது சிறிலங்கா தரைப்படையினர் கடலை நோக்கி ஆட்டிலெறி எறிகணை வீச்சினை நடத்தினர்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.