[ஞாயிற்றுக்கிழமை, 1 யூலை 2007]
சிறிலங்கா அரசாங்கமே துணை இராணுவக் குழுவினருடன் இணைந்து ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை நிகழ்த்தி வருகிறது என்பதை சிறிலங்கா வான் படையின் முன்னாள் அதிகாரி நிசந்த கஜநாயக்கவின் கைது சம்பவமும் அவரது வலைப்பின்னல் தொடர்புகளும் அம்பலப்படுத்துகின்றன.
கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்றில் நிசந்த கஜநாயக்க, சிறிலங்கா காவல்துறை, சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா மற்றும் மகிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பர்கள் ஆகியோருக்கு இடையேயான தொடர்புகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.
அச்செய்தி விவரம்:
வான் படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் அதிகாரியான நிசந்த கஜநாயக்க கடந்த ஜூன் 21 ஆம் நாள் ஆட்கடத்தல் மற்றும் பல கோடி ரூபாய் கப்பம் அறவிடுதல் நடவடிக்கைகளில் மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தேர்தல் வெற்றிகளுக்காக துணை இராணுவக் குழுவினரை அவர் ஏற்பாடு செய்து கொடுத்தமையும் தற்போது தெரியவந்துள்ளது.
தற்போதைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்பட்டிருந்த நிலையில் கருணா குழுவின் உதவியை நிசந்த கஜநாயக்க பெற்றுத் தந்தமையும் தற்போது வெளியாகி உள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத் தரப்பினரின் உதவியுடன்தான் கருணா குழுவினர் கடத்தல்களில் ஈடுபடுகின்றனர் என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று.
கடந்த 2005 ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தலின் போது கருணா குழுவினரின் உதவியை தான் பெற்றுத் தருவதாகவும் 20 மில்லியன் ரூபாய் தொகை தர வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் பேரம் பேசினார் கஜநாயக்க. ஆனால் கஜநாயக்கவின் அம்முயற்சி வெற்றிபெறவில்லை.
ஆட்கடத்தல் மற்றும் கப்பம் அறவிடுதல் சம்பவங்களில் கஜநாயக்கவுக்குத் தொடர்பிருக்கிறது என்று அம்பலமாகும் வகையில் இந்த குற்றங்களுக்கு மூளையாக கஜநாயக்க செயற்படுவதில் எதுவித சிக்கலும் உருவாகவில்லை.
ஆட்கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவங்களில் ஈடுபடும் துணை இராணுவக் குழுவினருக்கு மூளையாகவும் வழிகாட்டியாகவும் வான் படையின் முன்னாள் அதிகாரி நிசந்த கஜநாயக்க செயற்படுவதாகவும் அவர் நட்சத்திர விடுதி கொலிடே இன்னில் அறை எண் 706 இலிருந்து கொண்டு இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஜூன் 6 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். கஜநாயக்கவுக்கு "கஜதீர"தான் நட்சத்திர விடுதியில் தங்குவதற்குரிய தொகையை செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடத்தல் மற்றும் படுகொலைகளில் தொடர்புடைய குழுவினர், அம்பலப்படுத்தப்பட்டமையானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.
தற்போதைய படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல் சம்பவங்களுக்கு கொழும்பு பிரதி காவல்துறை மா அதிபர் றொகான் அபயவர்த்தனவுக்கும் வான் படையின் முன்னாள் அதிகாரி நிசந்த கஜநாயக்க ஆகியோர்தான் பொறுப்பு என்றும் கஜநாயக்கவின் "கடத்தல்" குழுவினருக்கு பிரதி காவல்துறை மா அதிபர் றொகான் அபயவர்த்தனதான் "ஆலோசகர்" என்றும் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்திருந்தார். ஆனால் தனக்கும் கடத்தல் மோசடிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று ஜூன் 6 ஆம் நாள் இரவே லக்ஸ்மன் செனிவிரட்னவிடம் தொலைபேசி மூலமாக அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டு வரும் மூன்று குழுக்களில் கருணா குழுதான் "முனைப்புடன்" செயற்பட்டது என்பதும் இந்த மூன்று குழுவினரும் "குற்றச் செயல்களில் பங்குதாரர்களாக" இருந்தமைக்கான சாத்தியம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
நாடாளுமன்றத்தில் லக்ஸ்மன் செனிவிரட்ன தவறான தகவலைக் கொடுத்திருக்கிறார் என்று அவர் மீது மகிந்த ராஜபக்ச அரசாங்கம், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தாக்கல் செய்திருக்கிறது. இருப்பினும் ஜூன் 9 ஆம் நாளன்று கஜநாயக்க தங்கியிருந்த கொலிடே இன் விடுதியின் 706 ஆம் எண் அறையிலிருந்து அவர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் உட்பட பல கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பங்களில் கஜநாயக்க குழுவுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
அரச தலைவர் தேர்தலின் போது மகிந்த ராஜபக்ச அணியினரை கருணா குழுவுடன் ஒப்பந்தம் செய்ய வைக்க நிசந்த கஜநாயக்க முயற்சித்துள்ளார். இதனைத்தான் முன்னாள் அமைச்சர் சிறீபதி சூரியராச்சி அம்பலப்படுத்தியிருந்தார்.
அரச தலைவர் தேர்தலின் போது 5 படகுகளை கருணா கோரியதாகவும் அதனை மகிந்த அரசாங்கம் செய்து கொடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
அரச தலைவர் தேர்தலின் பின்னர் ராஜபக்ச அணியினர், நிசந்த கஜநாயக்கவை பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்க விரும்பியது என்று கடவத்த சிறிலங்கா காவல்நிலையத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக சூரியராச்சி கொடுத்திருக்கும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி.பி.யின் பரப்புரைச் செயலாளர் விமல் வீரவன்சவை கஜநாயக்க நன்கு அறிந்திருக்கிறார். ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட போது தொலைக்காட்சி ஒன்றின் நேரடி நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருந்தபோது அவருடன் கஜநாயக்க தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
கலா ட்ரேடர்ஸ் நிறுவன உரிமையாளர் சிறீஸ்கந்தராஜா கடத்தப்பட்டபோது அவரை பாதுகாப்பாக விடுவிக்க முக்கிய அமைச்சர் ஒருவரை அணுகினர். சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அந்த் அமைச்சர், கடத்தல்காரர்களுடன் "பேச்சுவார்த்தை" நடத்தி "கப்பத் தொகை"யை குறைத்துக் கொடுத்திருக்கிறார். கணேசா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கடத்தப்பட்டபோது 80 மில்லியன் ரூபாய் கப்பம் கேட்கப்பட்டது. அதனை 40 மில்லியன் ரூபாயாகவும் குறைக்க அந்த அமைச்சர் "பேச்சுவார்த்தை" நடத்தியிருக்கிறார். இந்த விடயத்தை சிறீஸ்கந்தராஜாவின் குடும்பத்தினர் உறுதி செய்தபோதும் அமைச்சரின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர்.
கஜநாயக்க இரண்டு செல்லிடப்பேசிகளை பயன்படுத்தியிருக்கிறார். (0777- 757016 மற்றும் 0714-163990). இந்த இரண்டு செல்லிடப்பேசிகளிலிருந்து தொடர்பு கொள்ளப்பட்ட மற்றும் தொடர்பு கொண்ட அழைப்புகளை ஆராய்ந்தாலே கொழும்பு கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக அதிமுக்கிய தகவல்கள் வெளியாகக்கூடும்.
நிசந்த கஜநாயக்க ஓய்வுபெற்ற வான்படை படை அதிகாரி. முன்னாள் வான் படைத் தளபதி டொனால்ட் பெரேராவிடம் பணியாற்றியவர்.
அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களில் பல ஒப்பந்தங்களைப் பெற்று வரும் நலக கஜதீர, கஜநாயக்கவின் நெருங்கிய நண்பராவார். அவர் தன்னை வர்த்தகர் என்றும் கூறிக் கொள்கிறார். இந்த கஜதீரதான் கஜநாயக்கவின் நட்சத்திர விடுதி செலவுகளுக்கு தொகை செலுத்தி வந்தவர். மேலும் அந்த விடுதியில் கஜநாயக்க தங்கியிருந்த தளத்திலேயே மற்றொரு அறையும் கஜதீரவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
கருணா குழுவின் ஆதரவை ஒரே இரவில் மகிந்த அரசாங்கத்துக்கு கஜநாயக்கப் பெற்றுத் தந்துவிடவில்லை. கருணா குழுவினருடன் கஜநாயக்கவுக்கு நீண்ட தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளது. சிறிலங்கா வான் படையின் அதிகாரியாக பணியாற்றிய போதிருந்தே கருணா குழுவை கஜநாயக்க இயக்கி வந்துள்ளார்.
சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக்காலத்தின் போது ஆழிப்பேரலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டார் என்று கருணா தன்னிடம் கூறியதாக அப்போதைய கடற்படை தளபதி தயா சந்தகிரியிடம் கஜநாயக்க கூறியுள்ளார். இந்த விடயம் சிறிலங்காவின் பாதுகாப்பு சபையிலேயும் விவாதிக்கப்பட்டது தயா சந்தகிரியால் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. இந்த விடயம் வதந்தி என்று தெரிய வந்ததும் தயாசந்தகிரியின் முகம் வெளிறிப்போனது.
கொழும்பில் ஜூலை 2006 முதல் 70 தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அண்மையில் 50 முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு அவர்களிடமிருந்து 600 மில்லியன் ரூபாய் வரை கப்பப் பணம் அறவிடப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல் சம்பவங்கள் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் கடும் விமர்சனத்துக்குள்ளானபோதும் அரசாங்கம் கண்களை இறுக மூடிக்கொண்டுதான் இருந்தது. நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அம்பலப்படுத்திய பின்னரே ஜூன் 9 ஆம் நாள் இரவு கஜநாயக்க மற்றும் 4 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்றது அரசாங்கம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குற்றச்சாட்டை அரசாங்கம் முதலில் மறுத்தபோதும் கஜநாயக்கவை கொலிடே இன் விடுதியில் கைது செய்து விசாரணை செய்ததன் மூலம் அக்குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகவலை தெரிவிக்கும் வரை சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பில் உள்ள புலனாய்வுத்துறையினரால் ஆட்கடத்தல்களை முடிவுக்கு கொண்டுவர இயலவில்லை.
அழுத்தங்களினால் அரசாங்கம் இறுதியில் நெருப்பின் மீது நிற்கிறது. ஜூன் 9 ஆம் நாள் கஜநாயக்க கைது செய்யப்பட்டார். அன்று இரவே கஜநாயக்க விடுவிக்கப்பட்டார். கடத்தல் வழக்குகளில் கஜநாயக்கவுக்கு தொடர்பிருப்பது உறுதியாக தெரியவந்தமையால் மீண்டும் ஜூன் 21 ஆம் நாள் கஜநாயக்கவை கைது செய்ததாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்தது.
சிறிலங்கா செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர்கள் இருவரும் கொலிடே இன் விடுதியில் தங்கியிருந்த பின்னரே கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிசந்த கஜநாயக்கவுக்குப் பின்னர் தற்போது நலக கஜீதிர எனும் பாத்திரம் வெளியே வருகிறது.
கடந்த ஜூன் 9 ஆம் நாள் கஜநாயக்க கைது செய்யப்பட்ட போது மகிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய நண்பரான நெத் எஃப்.எம். தலைவர் நிகால் எப்ப செனிவிரட்னவை கஜதீர தொடர்பு கொண்டுள்ளார்.
நிகால் எப்ப செனிவிரட்னவும் நலக கஜதீரவும் நெருங்கிய வர்த்தக பங்குதாரர்கள். ஜூன் 9 ஆம் நாள் நிகால் எப்ப செனிவிரட்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையெழுத்திட்டு நிசந்த கஜநாயக்கவை அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் இது விடயமாக பிரதி காவல்துறை மா அதிபர் பிரதாபசிங்கவிடமும் நிகால் எப்ப செனிவிரட்ன பேசியுள்ளார். "இதுபற்றி கவலைப்பட வேண்டாம். காலையில் கஜநாயக்க விடுவிக்கப்பட்டுவிடுவார்" என்று ஜூன் 9 ஆம் நாளன்று நிகால் எப்ப செனிவிரட்னவிடம் பிரதி காவல்துறை மா அதிபர் பிரதாபசிங்க தெரிவித்தும் உள்ளார். ஆனால் அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு பாரிய அழுத்தங்கள் ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. நிசந்த கஜநாயக்கவின் கைது நடவடிக்கை மூலம் "நேர்மையான" அரசாங்கமாக மகிந்த தன்னை வெளிப்படுதிக் கொள்ளவும் ஒரு வாய்ப்பு உள்ளதாக மகிந்தவின் ஆலோசகர்கள் சுட்டிக்காட்டினர். இருப்பினும் தமிழ் மற்றும் முஸ்லிம் வர்த்தகர்களின் பொருளாதாரத்தில் பாரிய சீர்குலைவு ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய ஆட்டத்தல் சம்பவங்களி;ல் தமது அரசாங்கத்துக்கும் இராணுவத்துக்கும் தமது சகோதரர்களுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்படுவது தவிர்க்க இயலாத நிலையில் இருப்பதால் மகிந்தவுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மூலம்: புதினம்

0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.