Monday, July 02, 2007

சமாதானப் பேச்சுவார்தைகளை மீள ஆரம்பிக்குமாறு அரசாங்கம் நேர்வேயிடம் கோரிக்கை.!!

[திங்கட்கிழமை, 2 யூலை 2007]

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா அரசாங்கம் நோர்வே அனுசரணையாளர்கள் கோரியுள்ளது

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விசேட பிரதிநிதி ஒருவர் இது குறித்து நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்முடன் பேச்சுநடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத

அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்த நக்ர்வை மேற்கொண்டுள்ளதாக இராஜதந்திர தரப்புகள் தகவல் வெளியிட்டுள்ளன

பேச்சுவார்தைக்கான புறச் சூழல் ஏற்படுத்தப்பட்டாமல் பேச்சுவார்தைகளில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்ளமாட்டார்கள் என்ற திட்டவட்டமான முடிவை தெரிந்து கொண்டும் அவர்களை பேச்சுவார்தைகளில் ஈடுபடுத்துமாறு நோர்வே அனுசரணையாளர்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் போகருவது பயனற்றது என அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்

இதேவேளை கிழக்கில் படையினர் பெற்று வரும் வெற்றிகள் குறித்து மிகைப்படுத்திய செய்திகளை வெளியிட்டு வரும் விடுதலைப்புலிகளின் பதில் நவடிக்கைகளை தாமதப்படுத்தவே இந்த பேச்சு நாடகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

வடக்கு கிழக்கு மற்றும் தெற்கு என மும்முனைகளில் தமது முப்படைகளையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் பாரிய படை நடவடிக்கை ஒன்றை நடத்துவதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை எச்சரித்துள்ளது

விடுதலைப்புலிகள் அவ்வாறான மும்முனை தாக்குதலை வெற்றி கரமாக நடத்துவார்களேயானால் இராணுவ வெற்றிகள் குறித்து தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் யுத்த்தின் மூலமான தீர்வு குறித்து ஏற்படத்தப்பட்டுள்ள நம்பிக்கை தகர்ந்து விடும் என மகிந்த ராஜபக்ச தரப்பு அச்சமடைந்துள்ளது

அதேசமயம் தென்னிலங்கை அரசியலில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீலங்கா அரசாங்கம் மீண்டும் பேச்சுவார்தை என்ற போலி நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.