Tuesday, July 03, 2007

சிறீலங்காவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதவியை பிரித்தானியாவிடம் கையளிப்பு.!!

[செவ்வாய்க்கிழமை, 3 யூலை 2007]

ஜரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை யூலை முதலாம் திகதி தொடக்கம் பொறுப்பேற்றிருக்கும் போர்த்துக்கல், சிறீலங்காவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதவியை பிரித்தானியாவிடம் கையளித்துள்ளது.

போர்த்துக்கல் நாட்டின் தூதரகம் சிறீலங்காவில் இல்லாத காரணத்தினால் சிறீலங்காவுக்கான தனது இராஜதந்திர நடவடிக்கைகளை நேரடியாக மேற்கொள்வதில் போர்த்துக்கலுக்கு எழுந்துள்ள சிக்கலையடுத்தே பிரித்தானியவிடம் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இணைத் தலைமை நாடுகளில் ஜரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்கப்படுவதாலும் சமாதான முன்னெடுப்புக்களில பிரித்தானியாவின் பங்கு அதிகம் இருக்கும் என்பதாலும் பிரித்தானியாவிடம் போர்த்துக்கல் இப்பதவியை வழங்கக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் விவகாரத்தை அடுத்துவரும் ஆறு மாதங்களுக்கு பிரித்தானியாவே தலைமையேற்றுக் கையாளவுள்ளது. இணைத் தலைமை நாடுகளின் அங்கம் வகிக்கம் ஜரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் இனிவரும் காலங்களில் பிரித்தானியாவே பிரதிநிதித்துவப் படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை என்பனவற்றை பிரித்தானி கையாள்வதோடு இதற்கான மையமாக கொழுப்பில் உள்ள பிரித்தானியத் தூதரகமே விளங்கும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.