Tuesday, July 03, 2007

கிளிநொச்சியில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு - அரசாங்க அதிபர் .

[செவ்வாய்க்கிழமை, 3 யூலை 2007] கிளிநொச்சி மாவட்டத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்துள்ளார் முகமாலை ஊடகா பொருட்களை கிளிநொச்சிக்கு எடுத்து செல்வதற்கு மூன்று நாட்கள் மட்டுமே படையினர் அனுமதி வழங்கியுள்ளதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட யுத்த சூழ்நிலைகளை அடுத்து முகமாலை ஊடாக தினமும் 15 பார ஊர்திகள் அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும் எனினும் தற்போது மூன்று நாட்கள் மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கு படைத்தரப்பு அனுமதி வழங்கியுள்ளதால் மிகப் பெரிய நெருக்கடி நிலை தோன்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் கிளிநொச்சி மாவட்டத்தில் 27 920 குடும்பங்களை சேர்ந்த 166 660 பேர் யுத்த நடவடிக்கைகள் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் இவர்களுக்கான நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.