[செவ்வாய்க்கிழமை, 3 யூலை 2007]
மேற்குலக நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு வழங்கி வரும் நிதி பங்களிப்புகளை குறைத்துக் கொள்ளவதால் தமது அரசாங்கத்தை முடக்கிவிட முடியாது என ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகள் வழங்கும் உதவிகளை விட ஆசிய நாடுகளான ஜப்பான் சீனா இந்தியா ஆகிய நாடுகள் ஸ்ரீலங்காவிற்கு கூடுதல் உதவிகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா 50 வீதமான உதவிகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது ஜேர்மனியும் நதி உதவிகளை குறைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது எனினும் இவற்றின் மூலம் தமது நாட்டை முடக்கி விட முடியாது என்று பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ள 1.4 மில்லியம் பவுன் நிதி உதவியை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிரகாரிப்பதன் மூலம் அது வங்கோருத்து நிலையை அடைந்து விடாது என்றும் எனினும் அந்த நிதி உதவி மூலம் நன்மை பெறும் ஏழை விவசாயிகளே பாதிக்கப்படுவார்கள் என்றும் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
தமது நாட்டின் பொருளாதார ஈட்டத்தின் உயிர் நாடியாக திகழும் விவசாயிகள் துன்பத்தை அனுபவிக்கும் நிலைக்குள் தள்ளப்படுவது குறித்து தாங்கள் கவலை கொள்ளப் போவதில்லை என்று வெளிவிவாகர அமைச்சின் செயலாளர் பாலித கோகள்ள வெளியிட்டுள்ள கருத்து நாட்டு மக்களின் நலன்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் அக்கறையற்றிருப்பதை தெளிவுபடுத்தியுள்ளதாக சர்வதேச இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
Tuesday, July 03, 2007
மேற்குலகம் நிதியுதவியைக் குறைப்பதால் அரசாங்கத்தை முடக்கமுடியாது - பாலித கோகன்ன .!!
Tuesday, July 03, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.