Tuesday, July 03, 2007

வெடிகுண்டு பார ஊர்திக்கு உதவியோர் நாட்டுக்குத் துரோகமிழைப்பவர்கள்: சரத்பொன்சேகா.!

[செவ்வாய்க்கிழமை, 3 யூலை 2007]


தென்னிலங்கைக்குள் வெடிகுண்டு பார ஊர்திகள் நுழைவதற்கு உதவியோர் சிறிலங்காவுக்குத் துரோகமிழைப்பவர்கள் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:

தென்னிலங்கையில் பொதுமக்களின் சொத்துகளுக்கும் பாரிய சேதம் விளைவிப்பதற்கு முன்பாக வெடிகுண்டு பார ஊர்திகளை காவல்துறையினரும் இராணுவத்தினரும் பறிமுதல் செய்துவிட்டனர்.

கிழக்குப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொப்பிக்கலப் பகுதியில் சிறு தொகையிலான விடுதலைப் புலி உறுப்பினர்களே உள்ளனர். அவர்களை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர். சில நாட்களில் விடுதலைப் புலிகள் முற்றாக வெளியேற்றப்பட்டு அப்பிரதேசம் முழுமையும் கைப்பற்றப்பட்டுவிடும் என்றார் அவர்.

மூலம்: புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.